சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயம்.. இதைப்பார்த்து நீங்கள் பயந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பீதியை கிளப்பும் ஷார்ட் ஃபிலிம்!

Google Oneindia Tamil News

சென்னை: நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரேம் குமார் நடித்திருக்கும் பயம் என்ற குறும்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Recommended Video

    பயம் - திகில் தமிழ் குறும்படம் | பிரேம் குமார் | ராஜசேகர்

    பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரேம் குமார். இவர் நடித்திருக்கும் குறும்படம் பயம். இந்த குறும்படத்தை ராஜசேகர் எழுதி இயக்கியிருக்கிறார்.

    A Short film named Bayam gets applause from fans

    பயம் குறும் படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பயந்த சுபாவம் கொண்ட இளைஞர் ஒரு வீட்டில் தனியாக இருக்கும் போது எப்படி இருப்பார் என்பதை தத்ரூபமாக காட்டுகிறது பயம் குறும்படம்.

    இருள் சூழ்ந்த சாலையில் அணைந்து அணைந்து எரியும் மின் விளக்குக்கு நடுவே பயணிக்கிறது ஒரு இரு சக்கர வாகனம். அதோடு வீட்டிற்கு வரும் இளைஞர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை அறிகிறார்.

    NEP 2020: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும்போதுதான் இந்தியா வளம் பெறும்- பிரதமர் நரேந்திர மோடிNEP 2020: தாய்மொழியுடன் பிற மொழியையும் கற்கும்போதுதான் இந்தியா வளம் பெறும்- பிரதமர் நரேந்திர மோடி

    பின்னர் பயத்துடனேயே வீட்டிற்குள் செல்கிறார். இருட்டாக உள்ள மாடிப்படியை ஒரே மூச்சாக மூச்சு வாங்க கடக்கிறார் அந்த இளைஞர். அதன் பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அவர் சந்திக்கும் சம்பவங்களும் தருணங்களுமே பயம்.

    இருள், நிழல், சத்தம் என எதிர்பாராத க்ளைமேக்ஸுடன் மிரட்டுகிறது இந்த பயம் குறும்படம். க்ளைமேக்ஸில் நிச்சயம் ஒரு ஜருக்கு இருக்கும் என்பதை கேரண்டியாக சொல்லலாம்.

    English summary
    A Short film named Bayam gets applause from fans. Premkumar staring this movie and directed by Rajesekar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X