சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்

Google Oneindia Tamil News

Recommended Video

    புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்... சமூக ஆர்வலர் புகார்-வீடியோ

    சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனம் மற்றும் மது விருந்துகளை தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்று, கோலாகலமாக கொண்டாட சென்னை நகர மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    சென்னையில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் வழக்கமான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு என்று அதே போல் மது விருந்துக்கும் குறைவிருக்காது.கடந்த பல ஆங்கில புத்தாண்டு சந்தோஷத்துக்காகச் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பலரை பலி வாங்கியுள்ளது.அதே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தும் இருக்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    சாகச செயல்கள்

    சாகச செயல்கள்

    மேலும், கடந்த காலத்தில் நடந்த கசப்பான உண்மையும் ஆகும்.
    இளைஞர்கள், மதுபோதையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது ‘கெத்' என நினைக்கிறார்கள். ஆனால், மதுபோதையில் இவர்கள் செய்யும் இந்தச் சாகச செயல்கள், புத்தாண்டை குடும்பத்தோடுக் கொண்டாட வருபவர்களை ஆபத்தில் சிக்க வைத்துவிடுகின்றன.

    பைக் ரேஸ்

    பைக் ரேஸ்

    புத்தாண்டு பிறக்கும் இரவில் எல்லாச் சாலைகளிலும் குறிப்பாக, சென்னையில் உள்ள மெரினா சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை பழைய மற்றும் புதிய மகாபலிபுரம், கடற்கரை போன்ற சாலைகளில் பொதுமக்கள் செல்லவே பயப்படும் அளவுக்கு இந்த பைக் சாகசங்கள் அதிகரித்துவருகின்றன.

    நிகழ்ச்சி நிரல்

    நிகழ்ச்சி நிரல்

    புத்தாண்டு பிறக்கும் இரவுப்பொழுதை கழிக்க பல நட்சத்தர ஓட்டல்கள் மற்றும் தனியார் மதுபானம் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பாட்டு, நடனம், மது விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சி நிரல்களை வெளியீட்டு வருகின்றார்கள்.

    வீடியோ எடுக்க வேண்டும்

    வீடியோ எடுக்க வேண்டும்

    நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டையொட்டி, மது விருந்தினால் அநாகரிகமானச் செயல்கள் நடக்க வாய்ப்பு அதிக அளவில் நடைப்பெற இருக்கும் என்பதால், மது விருந்து உள்ள நிகழ்வுகளுக்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி வழங்க கூடாது என்றும் ஹோட்டல்களில் நடைப்பெறும் விழாக்களை காவலர்களை கொண்டு வீடியோ எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

    லைசென்ஸை ரத்து செய்க

    லைசென்ஸை ரத்து செய்க

    இரவுநேரத்தில் மது விருந்துடன் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறினால் ஹோட்டல்களின் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும். பிரபல நட்சத்தர ஹோட்டல்கள் மற்றும் பெயர், முகவரி குறிப்பிடாத பல இடங்களில் அனுமதியின்றி நடைப்பெறும் கொண்டாட்டங்களையும் ஒவ்வொரு காவல் நிலையத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆபாச நடனம்

    ஆபாச நடனம்

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனம் மற்றும் மது விருந்துகளை தடை விதிக்க வேண்டும் என்றும் புத்தாண்டை, அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த புகார் மனுவை தாங்களுக்கு பணிந்து சமர்ப்பிப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

    English summary
    Social activist K. Devarajan has complained to the police commissioner's office that the celebration of the New Year in Chennai will have a ban on Rubbish Dancing party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X