சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

வச்சா குடிமி எடுத்தா மொட்டை என ஆண்களுக்கு இருப்பதே ஒரு சில ஹேர்ஸ்டைல் தான். அதில் ஒன்று தான் தாடி. ஆனால் தற்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டது ஆய்வு ஒன்று.

a study reveals that men with beard carry more germs that dogs

அதாவது, நாய்களின் முடியில் இருக்கும் கிருமிகளைவிட, ஆண்களின் தாடி முடியில் இருக்கும் கிருமிகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழுவை சேர்ந்தவர்கள், 18 ஆண்களின் தாடி முடி மற்றும் 30 நாய்களில் கழுத்து முடியை சாம்பிளாக எடுத்து அய்வு செய்தனர்.

பேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது! பேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது!

அந்த ஆய்வின் முடிவை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாய்களின் முடிகளில் இருந்ததைவிட, ஆண்களின் முடிகளில் அதிக கிருமிகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கட்ஜீட் கூறுகையில், "தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கிறது என்பது எங்கள் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது. எனவே, தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என எடுத்துக்கொள்ளலாம்", என்றார்.

இந்த ஆராய்ச்சி முடிவு குறித்து கருத்து தெரிவித்த தாடி ஆர்வலர் கேத், "மனிதனின் கை மற்றும் முடியை எடுத்து ஆராய்ந்தால் நிறைய அசிங்கமான விஷயங்கள் அதில் இருப்பது தெரியவரும். தாடி வைத்திருப்பது அசுத்தமானது என நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தாடியை பற்றி நிறைய கெட்டக் கதைகள் சொல்லப்பட்டு வருவதால், இதுபோன்ற மனநிலை ஏற்படுகிறது", எனக் கூறுகிறார்.

இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் தாடியை ஷேவ் செய்யலாம் என்ற யோசனை வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.

English summary
A new study reveals that that men with beards carry more germs than dogs including deadly bacteria in their facial ball of hair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X