சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேள்வி கேட்பதே தவறா... தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilisai : தமிழிசை அக்காவுக்கு சூர்யா ரசிகனின் திறந்த மடல்- வீடியோ

    சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதற்காக நடிகர் சூர்யாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ள நிலையில், இதனால் வேதனை அடைந்த சூர்யா ரசிகர் ஒருவர், பொதுவானர்கள் யாரும் கேள்வி கேட்கக்கூடாதா என.. தமிழிசை சவுந்திராஜனுக்கு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    அண்மையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாக பேசியது பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா? என சூர்யாவை விமர்சித்துள்ளார்.

    இதை பார்த்து வேதனை அடைந்த சூர்யா ரசிகர் ஒருவர், புதிய கல்வி கொள்கை தொடர்பாக தனது சந்தேகங்களை தமிழிசை சௌந்திரராஜனுக்கு கேள்விகளாக எழுப்பி உள்ளார்.

    பள்ளி தேர்வு எதற்கு

    பள்ளி தேர்வு எதற்கு

    பள்ளிகளில் 12 வருடங்கள் முடித்து வரும் மாணவர்களை எந்த உயர்கல்வியில் சேர வேண்டும் என்றாலும் நுழைவு தேர்வு என்றால், பள்ளி இறுதி வகுப்பில் தேர்வு நடத்துவது ஏன்? நேரடியாக நுழைவுத்தேர்வில் வென்றால் தான் உயர்கல்வி என அறிவித்து விடலாமே.

    சமமான கல்வி

    சமமான கல்வி

    எல்லோருக்கு சமமான நுழைவு தேர்வு நடத்த விருப்பப்படும் மத்திய அரசு, எல்லோருக்கு சமமான கல்வி வாய்ப்பு வழங்கவில்லையே ஏன்? மூன்றாவது, ஐந்தாவது, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளை நடத்தவுள்ளார்கள். ஒரு தேர்வைச் சரியாகச் சந்திக்க முடியாமல் போனால் பள்ளியை விட்டே மாணவர்கள் சென்று விடுகிறார்களே?

    இடஒதுக்கீடு சட்டம்

    இடஒதுக்கீடு சட்டம்

    பொருளாதாரத்தில் பினதங்கிய உயர்ஜாதியினரின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது அக்கறை காட்டி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றிய அரசு எல்லாருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை தருவதில் இதுவரை அவசரம் அல்ல, ஆர்வம் கூட காட்டாதது ஏன்?

    கஸ்தூரி ரங்கன் பரிந்துரை

    கஸ்தூரி ரங்கன் பரிந்துரை

    கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரையில், ஒரு ஆசிரியர் அல்லது 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள். அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்?

    ஏழைகள் உயர்கல்வியில் சேருவார்களா

    ஏழைகள் உயர்கல்வியில் சேருவார்களா

    இந்தியாவில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் காளான்களாக முளைத்துள்ளன அவற்றின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடியாம். இனி அவர்களிடம் படித்த வந்தால் தான் உயர் கல்வியில் சேர வேண்டும் என்றால் பள்ளிகள் எதற்கு? நேரடியாக அங்கேயே சென்று பணக்கார்கள் படித்துவிடலாமே.. இன்னொரு விஷயம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழைகள் பணம் கொடுத்து பயின்று தான் நுழைவுத்தேர்வில் வெல்ல முடியும் என்றால் அவர்கள் இனி உயர் கல்வியில் சேருவார்களா?

    மக்களுக்காக சூர்யா கேள்வி

    மக்களுக்காக சூர்யா கேள்வி

    மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை சொல்லாமல், பொதுவானவர்கள் அரசின் கல்வி கொள்கைகளை எழுப்பியதற்காக விமர்சனம் செய்வது ஏன்? உங்களை போல் அரசியல் செய்வதற்காக சூர்யா கேள்வி எழுப்பவில்லை. மாறாக மக்களின் வலியையை உணர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அவை நல்லவையாக இருந்தால் ஏற்று செயல்படுவதே நல்ல அரசுக்கு அழகு. மாறாக விமர்சனம் செய்பவர்களை எதிரிகளாக கருதி வெறுத்து பேசுவது அழகல்ல.

    English summary
    A suriya fan written open letter to bjp leader tamilisai soundararajan after bjp attacks actor surya over new education policy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X