சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட மெகா கூட்டணிக்கு இந்த நிலையா? பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தும்.. காற்று வாங்கிய பாஜக கூட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi's Chennai rally | மெகா கூட்டணிக்கு இந்த நிலையா?

    சென்னை: பாஜக சார்பாக சென்னையில் இன்று நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மிக மிக குறைவான அளவிலேயே மக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    தமிழகத்தில் பாஜக நடத்திய பெரிய தேர்தல் கூட்டம் இதுவாகும். இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    "மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி".. அதிமுக உருவாக்கிய புதிய ஸ்லோகம்..!

    எப்போதும்

    எப்போதும்

    எப்போதும் பாஜக பொதுக்கூட்டங்களில் மக்கள் குறைவாகவே கலந்து கொள்வார்கள். வடமாநிலங்களில் பாஜக பெரிய கட்சி. ஆனாலும் தமிழகத்தில் அது நடத்தும் மாநாடுகளில் குறைவான எண்ணைக்கையிலேயே மக்கள் கலந்து கொள்வார்கள்.

    இன்றும் அப்படித்தான்

    இன்றும் அப்படித்தான்

    அதேபோல்தான் இன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் மக்கள் குறைவான எண்ணிக்கையிலேயே கலந்து கொண்டனர். 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிரார்க்கப்பட்டது. ஆனால் 50 ஆயிரம் பேர் கூட இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த வீடியோக்கள் மேடையில் முதல்வர் பேசிக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்டது. விழாவின் பாதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். ஆனால் அப்போதும் கூட அங்கு மக்கள் சுத்தமாக இல்லை. மிக மிக சொற்பமான எண்ணைக்கையிலேயே அங்கு மக்கள் இருந்தனர்.

    அட பாவமே

    அட பாவமே

    இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், எம்.பி அனுப்புமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டார். ஆனால் இத்தனை கட்சிகள், தலைவர்கள் வந்தும் கூட கூட்டம் குறைவாக வந்தது பாஜக கூட்டணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    A very fewer number of people have attended PM Modi''s BJP Chennai rally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X