சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சத்யமா நாளைக்கு படிக்கிறேம்மா.. ரெண்டையும் படிக்கிறேம்மா.. ப்ளீஸ்மா.. கதறும் சிறுவன்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சத்தியமா நாளைக்கு படிக்கிறேம்மா, இரண்டையும் படிக்கிறேம்மா... என ஆன்லைன் வகுப்பால் சிறுவன் ஒருவன் கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    ஆன்லைன் கிளாஸ் படுத்தும் பாடு.. கையெடுத்து கும்பிடும் சிறுவன்.. கியூட் வீடியோ!

    சீனாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா அங்கு சற்று ஓய்வு பெற்று மற்ற நாடுகளில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1.50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனது அத்தை பொது சொத்து அல்ல... பாரம்பரிய வீடு... மேல்முறையீடு செய்வேன்... தீபா பேட்டி!!எனது அத்தை பொது சொத்து அல்ல... பாரம்பரிய வீடு... மேல்முறையீடு செய்வேன்... தீபா பேட்டி!!

    9-ஆம் வகுப்பு

    9-ஆம் வகுப்பு

    1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்தே இவர்களுக்கு தேர்ச்சி கொடுக்க வேண்டும் என அரசு தெரிவித்தது. அதுபோல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடத்த திட்டமிட்டு அதை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கும் பழைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ் 2

    பிளஸ் 2

    இந்த நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் நிலுவையில் இருந்த போதுதான் கொரோனா பிரச்சினை வந்துவிட்டது. இதனால் அவர்களுக்கு அந்த தேர்வுகளும் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க தேர்ச்சி அடைந்து அடுத்த வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    சமூக ஆர்வலர்கள்

    சமூக ஆர்வலர்கள்

    இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பது, சிறிய குழந்தைகள் என்றால் ரைம்ஸ், கதைகள் பாட வைப்பது, எழுத வைப்பது போன்ற செயல்கள் நடத்தப்படுகின்றன. ஜாலியாக லீவில் இருக்கலாம் என நினைத்த குழந்தைகள் அறிவியலின் வளர்ச்சியால் ஆன்லைன் வகுப்புகளில் மாட்டிக் கொண்டு விட்டார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    மிஸ்

    இந்த ஆன்லைன் வகுப்புகள் எந்த அளவுக்கு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறுவன் இரு நாட்களாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்த நிலையில் அவரை அவரது தாய் கண்டிக்கிறார். அதற்கு அந்த மாணவன் கையெடுத்து கும்பிட்டு நாளைக்கு நிச்சயம் எழுதி மிஸ்ஸிடம் ஒப்பித்து விடுகிறேன் ப்ளீஸ்மா என கெஞ்சுகிறான்.

    ஒப்பித்தல்

    ஒப்பித்தல்

    அதற்கு இன்று படித்ததை நாளை ஒப்பித்து கொள். ஆனால் நேற்று படித்ததை இன்று ஒப்பிக்கிறேன் என சொன்னாயே அதை செய் என்கிறார். அதற்கு சிறுவன் சரிம்மா என சொல்லவிட்டு, உடனே ஜெர்க்காகி அம்மா இரண்டையுமே நாளைக்கே ஒப்பித்துவிடுகிறேன் என மழலையில் சொல்கிறான்.

    தொண்டை தண்ணீர்

    தொண்டை தண்ணீர்

    அதற்கு அந்த தாய் உனக்கு அம்மா எனது தொண்டை தண்ணீர் வற்ற, என் வேலையை விட்டு சொல்லிக் கொடுத்தேன். ஆனால் நீ இப்படி ஒப்பிக்காமல் இருக்கிறாயே என கேட்டதற்கு அந்த பையன் அதுக்குதாம்மா சொல்கிறேன் நீ இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ என்கிறான். இந்த வீடியோ ஒரு பக்கம் காமெடியாக வைரலானாலும், ஆன்லைன் வகுப்பு பரிதாபங்களாகவே பார்க்கப்படுகிறது.

    English summary
    A video goes viral on small boy about online class. He pleases is mother about his pending homework.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X