சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடல் அலையில் சிக்கிய படகு.. ஊஞ்சல் போல் ஆட்டம் காணும் காட்சிகள்.. வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் படகு ஒன்று தள்ளாடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகி அதி தீவிர புயலாக மாறி வருகிறது. இதனால் சென்னை, புதுவை, கடலூர் ஆகிய இடங்களில் உள்ள கடல்கள் நேற்று முதல் சீற்றத்துடனேயே காணப்பட்டது.

A Video goes viral that a boat is swinging in a beach

நிவர் புயல் சென்னையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் நாகை, சென்னை, கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடல்கள் கொந்தளிப்புடன் காட்சி அளித்தன.

A Video goes viral that a boat is swinging in a beach

கடல் அலைகளும் 10 அடி தூரத்திற்கு உயர்ந்தன. இதனால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. எனினும் சிலர் அறிவுறுத்தலை மீறி கடற்கரைக்கு சென்று செல்பி எடுப்பது, அலைகளின் உயரத்தை பார்ப்பது என இருந்து வருகிறார்கள்.

அது போல் யாரோ ஒருவர் கடலின் சீற்றத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். அதில் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றன. அந்த அலையில் சிக்கிய படகு ஒன்று ஊசல் போல் ஆடி கொண்டே வருகிறது.

தானாக அடித்து வரப்பட்டதா, அல்லது மீன் பிடிக்க சென்றவர்களின் படகா, அதனுள் யாரேனும் இருக்கிறார்களா என தெரியவில்லை.

English summary
A Video goes viral that a boat is swinging in a beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X