சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையில் ஸ்கேனர்.. காதுல செல்போன்.. இப்படிப்பட்ட சோம்பேறி இருந்தா.. கொரோனா எப்படி ஒழியும்?

Google Oneindia Tamil News

சென்னை: தெர்மல் ஸ்கேனர் வாங்கிக் கொடுக்கும் ரயில் நிலையத்தில் மக்களை சோதனை செய்யும் இந்த அதிகாரியின் சோம்பேறித்தனம் வைரலாக பரவியதை அடுத்து அவர் பணியிடை நீக்கப்பட்டார்.

உலகம் முழுவதும் கொரோனா எனும் அரக்கனை ஒழிக்க பல்வேறு யுத்திகள் கையாளப்பட்டு வருகின்றன. உயிர்கொல்லியான அந்த வைரஸை அழிக்கவும் மேலும் பரவுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் சோதனை செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனை

மருத்துவமனை

இல்லாவிட்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த குறிப்பிட்ட நாட்கள் வரை மருத்துவ அதிகாரிகள் அவர்களின் கண்காணிப்பில் இருப்பர். ஒரு வேளை காய்ச்சல் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

3 வினாடிகளில் ரிசல்ட்

3 வினாடிகளில் ரிசல்ட்

இவர்கள் எல்லாம் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை நடத்தப்படுகின்றனர். இந்த கருவியில் அகச்சிவப்பு கதிர்கள் இருப்பதால் யாரையும் தொட வேண்டிய அவசியமே இல்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து நெற்றிக்கு மேல் அந்த கருவியை ஆன் செய்தாலே போதும். 3 வினாடிகளுக்குள் உடல் வெப்பநிலையை காட்டும்.

ரயில் நிலையங்களில்

ரயில் நிலையங்களில்

இந்த கருவி வெளிநாடு உள்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அது போல் ரயில் நிலையங்களிலும் அந்த துறை அதிகாரிகள் இந்த சோதனையை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என ஸ்கேனர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாரி

அதிகாரி

உயிர்க் கொல்லியான கொரோனாவைத் தடுக்க வேண்டிய பொறுப்பின்றி, எவன் செத்தால் நமக்கென என்ற தொனியிலும் மிகவும் அலட்சியமாக தும்கூர் ரயில் நிலைய அதிகாரி சோதனை செய்துள்ளார். இதில் போனில் வேற பேசி கொண்டே சோதனை செய்கிறார். இந்த அதிகாரி குறித்த வீடியோ வைரலானது.

வேதனை

வேதனை

இதையடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார். உலகம் முழுவதும் முழுவீச்சில் கொரோனாவை ஒழிக்க இரவு பகல் தூக்கமில்லாமல் பாடுபட்டு வரும் நிலையில் இது போன்ற அதிகாரிகளும் உள்ளனர் என்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

அதிகாரியின் அலட்சியம்

அதிகாரியின் அலட்சியம்

இந்த சோதனை மூலம் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்து இந்த அதிகாரியின் சோம்பேறித்தனத்தால் அவர் கண்டுகொள்ளப்படாவிட்டால் எத்தனை பேருக்கு இந்த வைரஸ் பரவும் என்பதுகூட தெரியாமல் இவர் பணியாற்றியுள்ளார். ஏதோ சினிமா தியேட்டரில் உள்ளே விடுவதற்கு முன்னர் டிக்கெட் இருக்கிறதா என பார்த்துவிட்டு அனுப்புவது போல் இவர் செய்துள்ளார். பல மாதங்களாக கொரோனாவை தடுக்க பாடுபட்டு வரும் சுகாதார அதிகாரிகளுக்கு நன்றி செலுத்த மோடி நாளை மாலை கை தட்ட சொல்லியுள்ளார்.

அலட்சியம்

அவ்வாறிருக்கையில் இப்படியும் ஒரு அதிகாரி இருக்கிறார். இதே இவரது குடும்பத்தினர் இது போல் வெளிநாடுகளில் இருந்தோ வெளிமாநிலங்களில் இருந்தோ வந்தால் இப்படியா அலட்சியமாக நடந்து கொள்வார். என்னதான் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்தாலும் எத்தனை பேரை இப்படி அலட்சியமாக விட்டு விட்டார் என்பது நினைத்தால் பகீர் என்கிறது!

அமைச்சர் ஸ்ரீராமுலு

அமைச்சர் ஸ்ரீராமுலு

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சோதனை நடத்தாமல் பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எத்தனையோ அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வரும் நிலையில் இதுபோன்ற அதிகாரிகள் இருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

English summary
A Video goes viral that how an officer checks using thermal scanner with so much of laziness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X