டாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ
சென்னை: கழிப்பிடத்தில் அமர்ந்தபடி அப்பாவும் மகனும் பேசும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
டேனி டேவிடோ எனும் பெண் இருதினங்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் இரண்டு வயது மகன் மேட் கழிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறான். எதிரே அவனது தந்தை இருக்கிறார்.

மகனிடன் என்ன செய்கிறாய் என தந்தை கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன் பற்களை கடித்துக்கொண்டு, நான் மலம்கழிக்கவில்லை. சிறுநீர் தான் கழிக்கிறேன் என கூறுகிறான். தந்தை மீண்டும் அதையே கேட்க, மகனும் தான் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறுகிறோன்.
இடையே தந்தையின் கண்கள் ஏன் கலங்கி இருக்கிறது என சிறுவன் கேட்கிறான். அதற்கு அவர் சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வந்துவிட்டதாகக் கூறுகிறார். இந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.
தந்தையும் மகனும் பாசப் பிணைப்புடன் பேசிக்கொள்வதை பார்த்து பலரும் மெய்சிலிர்த்து போகின்றனர். அதில் பாலிவுட் நடிகை வித்யா பாலனும் ஒருவர். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வித்யா பாலன், "அடுத்தவர்கள் வீடியோவை பதிவிடுவது இது தான் முதல் முறை என தெரிவித்துள்ளார்",