சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை...தமிழகத்திலும் இது நிகழும் - கமல்

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் மாபெரும் வெற்றி பெற்று பல வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

AAP wins Gujarat municipal election Kamal twitter post

பாஜகவின் இரும்புக்கோட்டையாக கருதப்படும் சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குஜராத் தேர்தல்: பாஜகவின் சூரத் கோட்டையில் எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி!குஜராத் தேர்தல்: பாஜகவின் சூரத் கோட்டையில் எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி!

பாஜகவின் கோட்டையை உடைத்துள்ளது ஆம் ஆத்மி. கெஜ்ரிவாலின் டெல்லி மாடல் குஜராத்தில் நம்பிக்கை அளிக்கிறது என குஜராத் ஆம் ஆத்மி பொறுப்பாளர் குலாப் சிங் தெரிவித்துள்ளார்.

சூரத் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். இனி நாம் என்றும் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

இந்த வெற்றியைடுத்து குஜராத் மாநிலத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செல்லவுள்ளார். சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியிலும் அவர் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MNM leader Kamal Haasan posted on his Twitter page that the Aam Aadmi Party's victory in the Gujarat local body elections shows that there is nothing in democracy that is an unbreakable iron fortress. People have never abandoned those who are fielding in the interest of the people. Kamal Haasan has mentioned that this will also happen in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X