சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ்..மெயிலில் புகார் சொல்லுங்க..முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கடைக்கோடியில் வசிக்கும் ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கை மனுவினை மிக எளிதாக அளிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மின்னஞ்சல் முகவரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

புதுக்கோட்டையில் ஆசிரியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மீண்டும் ஒருமுறை எனது இல்ல விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் கிடைத்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய விளக்கம்தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்தாகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த முக்கிய விளக்கம்

 Aasiriyarmanasu: Anbil Mahesh with teachers Give complaint on mail

மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "எனக்காக ஆசிரிய பெருமக்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகதான் ஆசிரியர் மனசு பெட்டி எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

 Aasiriyarmanasu: Anbil Mahesh with teachers Give complaint on mail

கடைக்கோடியில் வசிக்கும் ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கை மனுவினை மிக எளிதாக அளிக்க வேண்டும் என்பதற்காகதான் புதுக்கோட்டை நகரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் அறிமுகம் செய்து வைத்தேன். [email protected]. [email protected].

மின்னஞ்சல்கள் மூலம் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கையினை அளிக்கலாம். ஆசிரியர்களின் கோரிக்கையை நிச்சயம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவார்! மீண்டும் சந்திப்போம்! உரையாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Minister Anbil Mahesh Poiyamozhi said that the Chief Minister will fulfill all the demands of the teachers. Minister Anbil Mahesh Poiyamozhi has introduced two e-mail addresses so that the teachers can easily submit their petitions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X