சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடாது மழை விடாது பெய்தாலும்.. பால் விற்பனை உண்டு.. பால் கிடைக்கலையா.. போன் போடுங்க- ஆவின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: புயல் காரணமாக புதன்கிழமை பால் வினியோகம் பாதிக்கப்படாது என்று ஆவின் நிறுவனம் அறிவித்து உள்ளது.

நிவர் ஒரு புயல் அதி தீவிர புயலாக நாளை மாலைக்கு மேல், புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில்தான், புதன்கிழமை பால் வினியோகம் வழக்கம் போல் இருக்குமா என்று பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Aavin milk supply will continue amid cyclone nivar

புயலால் பால் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆவின் பாலகங்களில், பால் பவுடர், டெட்ரா பால் பாக்கெட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் நிவர்.. காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் எங்கே? பரபரப்புநெருங்கி வரும் நிவர்.. காரைக்காலில் இருந்து 30 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் எங்கே? பரபரப்பு

சென்னையில் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர், பிற மாவட்டங்களில் 2 லட்சம் லிட்டர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதியில் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்காவது பால் வினியோகத்தில் பிரச்சினை இருப்பதாக தெரிந்தால் 1800 425 3300, என்ற இந்த கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Tamil Nadu government owned aavin milk company has said that, the milk supply will continue on Wednesday despite cyclone nivar is making landfall in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X