சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபிநந்தன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் வர வேண்டும்.. தந்தை வர்த்தமான் பிரார்த்தனை

Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு அவரது தந்தையும் முன்னாள் விமான படை அதிகாரியுமான சிம்மக்குட்டி வர்த்தமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது.

இந்தியா

இந்தியா

அவரை தாங்கள்தான் பிடித்து வைத்திருக்கிறோம் என்பதற்கான வீடியோவை அந்நாடு வெளியிட்டது. இந்த நிலையில் அவரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

மெசேஜ்

மெசேஜ்

இந்த நிலையில் சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் அபிநந்தனின் தந்தை முன்னாள் ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான் ஒரு மெசேஜ் வெளியிட்டுள்ளார்.

ஆசிகள்

ஆசிகள்

அதில் அவர் கூறுகையில் என் மகன் அபிநந்தன் மீண்டு வர வேண்டும் என்ற உங்களின் வாழ்த்துகளுக்கும் விசாரிப்புகளுக்கும் நன்றி. அபி உயிரோடும் எந்த காயங்களும் இன்றி அவரை ஆசிர்வதிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

பாகிஸ்தானிடம் பிடிபட்டாலும் தைரியமாக பேசுகிறார். அவர் உண்மையான வீரர். அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அவர் பாதுகாப்பாக நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.

நன்றி

நன்றி

அபி நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும். அவரை பாகிஸ்தான் துன்புறுத்தக் கூடாது. நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அவர் மீண்டு வரவேண்டும். உங்கள் ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் நாங்கள் திடமாக இருக்கிறோம். அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

English summary
Message from Veteran Air Mshl Varthaman, Father of Wg Cdr Abhinandan thanks, for their support and energy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X