சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு மீது தமிழகத்தில் இவ்வளவு அதிருப்தியா..? 44% பேர் பிடிக்கவில்லை எனக் கூறி அதிரடி..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது 44% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஏபிபி சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு உள்ள அதிருப்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா, உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஏபிபி சி-வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை இன்று மாலை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மத்திய அரசு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு மக்கள் தெரிவித்த பதில்களின் விவரமும்;

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!

மக்கள் மனது

மக்கள் மனது

மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளது?

  • மிக திருப்தியாக உள்ளது - 11%
  • திருப்தியாக உள்ளது -32%
  • திருப்தியாக இல்லை - 44%
  • கருத்துக் கூற விரும்பவில்லை -13%
மோடி செயல்பாடுகள்

மோடி செயல்பாடுகள்

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உங்களுக்கு நிறைவாக உள்ளதா?

  • மன நிறைவாக உள்ளது -13 %
  • நிறைவாக இருக்கிறது -35%
  • மன நிறைவு தரவில்லை -44%
  • கருத்துக் கேட்காதீர்கள் - 08%
புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி நிலவரம்

தமிழகத்தை போலவே மத்திய அரசு மீது புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் அதிருப்தி குரல்கள் அதிகம் ஒலித்துள்ளன. புதுச்சேரியில் தமிழகத்தை போல் 44% பேரும் கேரளாவில் 35% பேரும் மத்திய அரசின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கருத்துக்கணிப்பில் வாக்களித்துள்ளனர். இதேபோல் மோடியின் செயல்பாடுகள் மன நிறைவு தருவதாக கூறியவர்களை விட மன நிறைவு தரவில்லை எனக் கூறியிருப்பவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர்

இதனிடையே கேரளாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பினராயி விஜயனின் செயல்பாடு எப்படி உள்ளது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 48% பேர் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் இந்தக் கேள்வியை கருத்துக்கணிப்பின் போது கேட்கவில்லை எனத் தெரிகிறது.

English summary
Abp c voter Survey, Are you satisfied with central govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X