சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரில் தேர்தல் நடக்குமா, நடக்காதா.. தனி மனிதராக கண்ணீர் சிந்தி வரும் ஏசி சண்முகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏசி சண்முகம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

    சென்னை: வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவார்களா, மாட்டார்களா? என்று தனி ஒரு ஆளாகவே கண்ணீருடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஏசி சண்முகம்!

    வேலூரில் மக்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த பணம் பிடிபட்டது. இந்தப் பணம் திமுகவிற்கு சொந்தமானது என்றும், துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.

    இமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா?.. நேபாள அரசு புது விளக்கம்! இமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா?.. நேபாள அரசு புது விளக்கம்!

    நிலைகுலைந்தார்

    நிலைகுலைந்தார்

    இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி, தேர்தலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் துரைமுருகன் தரப்பை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏசி சண்முகம்தான்! இது சம்பந்தமாக திமுக தரப்பில் பெரிய அளவிலான பிரச்சனை, விவாதம் என இறங்கவில்லை. ஆனால் ஏசி சண்முகம்தான் சட்டரீதியாகவே இதை அணுகினார். வேலூரில் தேர்தல் இல்லை என்று கோர்ட்டும் கைவிரித்த நிலையில்தான் ரொம்பவும் நிலைகுலைந்து போனார்.

    குலுங்கி அழுதார்

    குலுங்கி அழுதார்

    ஓட்டு போட வந்திருந்த போதுகூட 4 தொகுதி இடைத்தேர்தலின்போது வேலூருக்கு தேர்தல் நடத்தினால் நல்லா இருக்கும் என்று குலுங்கி அழுதவாறே சொன்னார். அன்று முதல் இப்போதுவரை அதை தான் சொல்லி கொண்டு இருக்கிறார்.

    குடியரசு தலைவர்

    குடியரசு தலைவர்

    தேர்தல் ஆணையத்தையே நம்பி இருந்தவர், கடைசியில் குடியரசு தலைவரிடமே சென்று மனு கொடுக்கும் நிலைமைக்கு வந்தார். இத்தனை முயற்சிகளையும் தனி நபராகவே ஏசி சண்முகம் செய்து வருகிறார். இத்தனைக்கும் அவர் அதிமுக கூட்டணியில் இருப்பவர்! ஆனால் கூட்டணியில் ஒருத்தர்கூட, ஏசி சண்முகத்துக்காகவே, வேலூர் தேர்தலை குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    கல்லூரி

    கல்லூரி

    ஏசி சண்முகம் இவ்வளவு பாடுபட என்ன காரணம்? துரைமுருகனுக்கு எப்படி கல்லூரிகள், பள்ளிகள் இருக்கிறதோ அதேபோலதான் ஏசிஎஸ்-க்கும் உள்ளது. கடந்த முறை தேர்தலில் ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். திமுகவோ 3-ம் இடத்தைதான் பிடித்தது. அதனால் இந்த முறை எப்படியும் வெற்றிதான் என்று நம்பினார்.

    தாராளங்கள்

    தாராளங்கள்

    இதைதவிர தொகுதிக்குள் நிறைய தாராளங்களை காட்டினார். அதிமுகவுக்கென தேர்தல் நிதி என்று தனியாக கொடுத்துள்ளார். வேலூரில் தேர்தலை இப்போது நடத்தாவிட்டால், இது எல்லாமே நாசமாக போய்விடுமே என்ற பீதி இன்னமும் ஏசிஎஸ்சுக்கு உள்ளது.

    குழப்பம்

    குழப்பம்

    ஒருவேளை திரும்பவும் தேர்தல் என்று அறிவித்தாலும் "இழந்தது" கிடைக்குமா? அல்லது மீண்டும் முதலிலிருந்து செலவு செய்யணுமா? அல்லது அதிமுகவில் மீண்டும் சீட் கிடைக்குமா போன்ற கலக்கம் நிறைந்த கேள்விகள், சந்தேகங்கள், பயங்கள், குழப்பங்கள் ஏசி சண்முகத்தை சூழ்ந்து கொண்டுள்ளன!

    English summary
    Pudhiya Needhi Katchi AC Shanmugam is taking Legal Steps to conduct MP election in Vellore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X