• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன செய்யலை.. எல்லாம் செஞ்சும்.. இந்த முறையும் வேலூர் கிடைக்கலையே.. பெரும் விரகத்தியில் ஏசிஎஸ்!

Google Oneindia Tamil News
  Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

  சென்னை: போன முறை நடக்காத தேர்தலுக்கே குலுங்கி குலுங்கி அழுதார் ஏசிஎஸ்.. இந்த முறை இந்த தேர்தல் ரிசல்ட்டை எப்படி எடுத்து கொண்டுள்ளார் என்றே தெரியவில்லை.

  போன முறை தேர்தல் ரத்து என்றதும், துரைமுருகன் தரப்பை விட அதிகமாக பாதிக்கப்பட்டது ஏசி சண்முகம்தான்! அதனால்தான், சட்டரீதியாகவே இதை அணுகியும், நிலைகுலைந்து போனார்... கண்ணீர் வடித்து நின்றார்.

  ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு பக்க பலமாக யாருமே இல்லாத நிலையில்,முதல்வர் எடப்பாடி தரப்புக்கு ஒரு நல்ல வாய்ப்பை மீண்டும் போட்டியிட அளித்தது. போன முறையே 100 கோடிக்கு மேல் வேலூர் தொகுதிக்காக ஏசி சண்முகம் செலவு செய்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போதும் அதிக செலவு செய்தார் என்றும் கூறப்பட்டது.

  பிரதமர் மோடி

  பிரதமர் மோடி

  ஏனென்றால், இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்று பாஜக அமைச்சரவையில் சேர வேண்டும் என்ற முடிவுடன் அவர் உறுதியாக இருப்பதாக சொன்னார்கள். அதனால் எப்படியும் ஏசி சண்முகத்தை ஜெயிக்க வைக்க பாஜக தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்று நம்பப்பட்டது. அதிலும் பிரதமர் மோடி, எனக்காக பிரச்சாரம் செய்ய வேலூருக்கு வருவார் என்று ஒரு பேட்டியில் ஏசி சண்முகமே தெரிவித்திருந்தார்.

  வேட்பாளர்

  வேட்பாளர்

  ஆனால் அதிமுகவின் முகம் வேறு மாதிரியாக வேலூரில் தென்பட்டது. ஒரு பாஜக அடையாளம்கூட கண்ணில் படாமல் பார்த்து கொண்டனர். இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் என்பதால், பாஜக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகத்துக்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது. ஆனால் பணம்தான் பாதாளம் வரை பாயுமே என்பதால் எப்படியும் ஏசிஎஸ் மேல வந்துவிடுவார் என்றே பரபரப்பான பேச்சு எழுந்து வந்தது.

  தேர்தல் நிதி

  தேர்தல் நிதி

  ஆனால் அவ்வளவும் இப்போது புஸ்வாணம் ஆகிவிட்டது. அள்ளி அள்ளி வீசியும் வாக்குகளை வேற லெவலுக்கு கொண்டு போக முடியவில்லை. அதிமுகவுக்கென தேர்தல் நிதி என்று தனியாக கொடுத்தும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

  அதிமுக

  அதிமுக

  இந்த தேர்தலில் ஏசி சண்முகம் வெற்றி பெற்றிருந்தால், அதிமுகவுக்கு கூடுதலாக ஒரு எம்பி கிடைத்திருப்பார். அதுமட்டுமின்றி திமுக கிடைத்த வெற்றி, பாஜகவுக்கு எதிராக மக்கள் எடுத்த முடிவினால் கிடைத்த வெற்றி என்பதை நிரூபிக்கலாம் என்பதும் அதிமுகவினரின் திட்டமாக இருந்தது.

  மத்திய அமைச்சர்?

  மத்திய அமைச்சர்?

  ஆனால் அரசியலில் இத்தனை வருட சீனியரான ஏசிஎஸ்.. இந்த முறையாவது டெல்லி பக்கம் போவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் கனவாகிவிட்டது. இதனால் மத்திய அமைச்சர் பதவி என்பதும் கானல் நீராகிவிட்டது. ஏற்கனவே பயங்கள், குழப்பங்கள் சூழ்ந்து கிடந்த ஏசி சண்முகம் இனி இதை எப்படி எடுத்து கொள்வார் என தெரியவில்லை. "விட்டதை"யும் எப்படி, எதன்மூலம், பிடிப்பார் என்றும் புரியவில்லை.

  English summary
  vellore lok sabha election. vote result live update: It seems likely that AC Shanmugam will lose his chance to become Union Minister
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X