சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்டெய்ண்மெண்ட் ஜோன்.. முதல்முறையாக சென்னைக்கு சூப்பர் செய்தி சொன்ன மாநகராட்சி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கண்டெய்ண்மெண்ட் ஜோன்கள் என்று அழைக்கப்படும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டுவது இல்லை. சென்னையில் தற்போது வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

According to the Chennai Corporation officials, there are no containment zones in Chennai at present

இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 9868 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதுவரை சென்னையில் கொரோனாவால் 3097 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் உயிரிழப்பும், தொற்ற பாதிப்பும் குறைந்துள்ளதால் இங்கு நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. முன்பு
தற்போது சென்னையில் உயிரிழப்பும், தொற்று பாதிப்பும் குறைந்துள்ளதால் இங்கு நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. முன்பு சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக தற்போது அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதன்படி சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
The area is currently declared as a containment zones only if more than 5 people on a street in Chennai are confirmed to have corona infection. Thus the number of containment zones in Chennai decreased day by day. According to the Chennai Corporation officials, there are no containment zones in Chennai at present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X