சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதை" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்!

ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விரைவில் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! - வீடியோ

    சென்னை: "ஒரே வாரத்தில் 1500 பேர் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்துள்ளனர்.. யாருமே நம்மளை கண்டுபிடிக்க முடியாது என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்க கிட்ட பிரத்யேக சைபர் லேப் இருக்கிறது. அதன் மூலம் குற்றவாளிகளை ஈஸியா கண்டுபிடிக்க முடியும். விரைவில் அவர்களுக்கு ஜெயில்" என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் நிறைய பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக போலீசாருக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டது.

    எனவே, தமிழகத்தில் யாரெல்லாம் ஆபாச படங்களை பார்க்கிறார்கள் என்ற விசாரணையை நடத்தவும் முடிவு செய்தது. இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சொன்னதாவது:

    வீடியோ

    வீடியோ

    ''சிறுமிகளை வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் 3 நாட்களில் இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.

    ஜெயில்

    ஜெயில்

    ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம் மற்றும், 'போக்சோ'வில் கைது செய்யப்படுவர். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.

    சென்னை

    சென்னை

    தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பார்த்தவர்கள் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில்தான் அதிகம் பேர், பெண்கள், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் எல்லாம் எந்த மாதிரியான வீடியோக்கள், படங்களை பார்த்தனர் என்பதையும் கண்டுபிடித்துள்ளோம்.

    1500 பேர்

    1500 பேர்

    நவம்பர் மாதம் ஒரே வாரத்தில் சுமார் 1500 பேர் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளனர். அவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளோம். அவர்களுக்கு விரைவில் ஜெயில் தண்டனை வாங்கித் தருவோம். இந்த வீடியோக்கள் வாட்ஸ்ஆப் அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதா என்பதையும் விசாரித்து வருகிறோம்.

    ஷேர் செய்துள்ளனர்

    ஷேர் செய்துள்ளனர்

    செல்போன், லேப்டாப்பில் dark web அல்லது விபிஎன் மூலம் இணையத்தை பயன்படுத்தினால் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் பிரத்யேக சைபர் லேப் இருக்கிறது. அதன் மூலம் சில தொழில்நுட்பங்களை கொண்டு எங்களால் குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இது போல, ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்பவர்கள், அதை ஷேர் செய்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அவர்களுடைய ஐபி முகவரியை டிஜிட்டல் ஆதாரமாக கொண்டு விரைவு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர இருக்கிறோம்.

    ஐதராபாத் சம்பவம்

    ஐதராபாத் சம்பவம்

    அதனால், யாரும் இது போன்ற வீடியோக்களை பகிர்வோரை ஊக்குவிக்க வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். ஐதராபாத் சம்பவம் போன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்து விடக் கூடாது என்பதற்காக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அவர்களுடைய செல்போன்களில் "காவலன் ஆப்" டவுன்லோட் செய்து பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். இது ஆபத்து காலங்களில் அவர்களுக்கு மிகவும் உதவும்" என்றார்.

    English summary
    action against child pornography by tamilnadu police and additional dgp ravi explains about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X