சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

90 வீடியோக்கள்.. "தொங்கி விடுகிறேன்".. கொரோனா பற்றின பகீர்கள்.. தணிகாச்சலம் மீது பாய்ந்த குண்டாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: "தூக்கில் தொங்கிவிடுகிறேன்" என்ற ஆவேச வார்த்தைகள் உட்பட கிட்டத்தட்ட 90 வீடியோக்களில் ஒவ்வொன்றிலும் கொரோனா குறித்த ஒவ்வொரு பகீர் தகவலையும் சொல்லி மக்களையும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்திய தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பல வருடங்களாக டிவியில் பார்த்து பழகிய முகம்தான் தணிகாசலம்.. விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கவும் இவரது மருத்துவத்தன்மை குறித்த யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.

ஆட்டிசம், வெண்புள்ளி குறைபாடு, மூலம் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.. ஆனால் இந்த நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொண்டவர்களே 2 புகார்கள் தந்துள்ளனர்.

ஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்ஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்

போலி மருத்துவர்

போலி மருத்துவர்

"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், என்னை மத்திய மாநில அரசுகள் சிகிச்சை தர விடாமல் தடுக்கின்றன, ஐநா என்னை தடுக்கிறது, கொரோனாவை குணப்படுத்த முடியாவிட்டாவில் தூக்கில் தொங்குகிறேன்" என்றெல்லாம் இவர் சோஷியல் மீடியாவில் பேசி வந்த நிலையில்தான், அவரை போலி சித்த மருத்துவர் என்று சித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

விசாரணை

விசாரணை

அத்துடன், தம்மிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதித்து வருவதாக, தணிகாச்சலம் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. கைது செய்யப்படுவதற்கு முன்பேயே இவர் முறையாக படித்த ஒரு டாக்டர் இல்லை என்று சொல்லிவிட்டனர்.

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி

பிஎஸ்சி கெமிஸ்ட்ரி

விசாரணையில்தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துள்ளது தெரியவந்தது.. இவர் மனைவி சித்த மருத்துவம் முறைப்படி படித்துள்ளாராம்.. தணிகாசலம் அப்பா, பாம்பு, தேள்கடிக்கு நாட்டு வைத்தியம் செய்து வந்தவராம்... அதேபோல தணிகாசலமும் பரம்பரை வைத்தியர் என்ற சர்ட்டிபிகேட்டை வைத்து கொண்டுதான் சித்த மருத்துவர் என்று இவ்வளவு காலம் டிவியில் பேசி, கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளார்.

ஹோமியோபதி

ஹோமியோபதி

கடைசியில் கடந்த 2014-ம் ஆண்டு இவரது பரம்பரை வைத்தியர் என்ற அங்கீகாரத்தையும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கவுன்சில் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் இப்போது 2 விஷயங்கள் தணிகாசலம் குறித்து மேலும் தெரியவந்துள்ளது.. தணிகாசலம் வெளிநாடுகளில் எல்லாம் ஃபேமஸ் டிவி மூலமே ஆகிவிட்டார்.. சோஷியல் மீடியாவையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, வெளிநாடுகளில் ஏராளமான நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.

மருந்து குடோன்

மருந்து குடோன்

மலேசியா, சீனா, ஸ்விட்சர்லாந்து என பல்வேறு நாடுகளில் நோய்களை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்று, மருந்துகளையும் அங்கு அனுப்பியிருக்கிறாராம்.. இப்படி 6 வருடமாகவே மருந்துகளை அனுப்பி வைத்து கொண்டிருந்திருக்கிறார்.. இதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு மருந்து குடோனே சொந்தமாக வைத்திருந்திருக்கிறார்.. அங்குதான் எல்லா மருந்தும் தயாராகுமாம். இந்த தகவலை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

தற்போது தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது... இதற்கான நடவடிக்கையை சென்னை மாநகர கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்... தணிகாச்சலத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எத்தனை பேருக்கு இவர் மருத்துவம் பார்த்தார், அவர்களின் நிலை, பாதிப்புகள், மருந்துகளின் தன்மை குறித்தெல்லாம் இனிமேல்தான் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

English summary
action against fake doctor thanikachalam under goondas act
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X