சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எச்சரிக்கை!.. மெரினாவில் குளிக்க 18 வயது வேண்டும்... இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்

Google Oneindia Tamil News

Recommended Video

    பணத்திற்காக கடத்தல் நாடகமாடிய பெண் | மெரீனாவில் மூழ்கிய பள்ளி மாணவர்கள்- வீடியோ

    சென்னை: 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    சிறுவர்களை கடற்கரை அழைத்து வரும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    3 மாணவர்கள் மாயம்

    3 மாணவர்கள் மாயம்

    தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான தாம்பரத்தை சேர்ந்த வினோத் (14), சதீஷ் குமார் (14) மற்றும் கிண்டியை சேர்ந்த செந்தில் குமார் (14) ஆகிய 3 பேர் நேற்று கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.

    தேடும் பணி

    தேடும் பணி

    இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும், தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பலர் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பகுதியில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.

    புள்ளி விவரம்

    புள்ளி விவரம்

    2017 - 18 - ல் மட்டும், 15 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட, 20 பேர் மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, இதுவரை கிடைக்கவில்லை என, போலீஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதே நேரம், தொடர்ந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் எச்சரிக்கை

    போலீஸ் எச்சரிக்கை

    இந்தநிலையில், 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Police Warns, Those who under the age of 18 will be taken action If bathe in Marina
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X