• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதை விடுங்க மக்களே.. நம்ம நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி கல்யாணம்.. மனசார வாழ்த்துங்க!

|
  நந்தினிக்கு கல்யாணம், ஜெயில்ல போட்டுட்டாங்களே ? சமூக ஆர்வலர்கள் குமுறல்!-வீடியோ

  சென்னை: நந்தினிக்கு வர்ற 5-ம் தேதி கல்யாணம் என்ற மகிழ்ச்சியான தருணம் நடக்கும் முன்னரே, மீண்டும் சோதனை கைது மூலம் அரங்கேறி உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தனது பாதையில் மிக மிக ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறார் இந்த மதுரை மகள்.

  மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே போராட்டங்களை துவங்கியவர். இந்த வயதிலேயே கைது, வழக்கு என பெரிய பெரிய விஷயங்களை சந்தித்து விட்டார்.

  குடியின் கொடுமையை நேரில் பார்த்து அனுபவித்த துயரத்தால்தான் நந்தினி குடிக்கு எதிரான போராளியாக உருமாறினார். போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவர் படிப்பை முடித்தார். இப்போது நந்தினி ஒரு வக்கீல்!

  பள்ளிக்கால நண்பர்

  பள்ளிக்கால நண்பர்

  இவருக்கு வருகிற 5-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கால நண்பர் குணா ஜோதிபாசுதான் மாப்பிள்ளை. இதை பற்றி நந்தினி தன் பதிவில் சொல்கிறார், "குணா ஜோதிபாசு ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். நாங்கள் இருவரும் 3 வயதிலிருந்து நண்பர்கள். ஒரே பள்ளியில் படித்தோம். என் தந்தையும் அவரது தந்தையும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள், 28 வருடங்களாக குடும்ப நண்பர்கள்.

  உதவிகள்

  அநியாயத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தில் எங்களோடு இணைந்து பயணிக்க குணா முடிவு செய்துள்ளார். இதுவரை நாங்கள் செய்துள்ள பல போராட்டங்களில் பலவிதங்களில் உதவி செய்துள்ளார். எங்கள் இருவரின் குறிக்கோளும், சிந்தனைகளும் ஒத்துப் போவதால் நாங்கள் இருவரும் பெற்றோரின் முழு சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம். இரு வீட்டிலும் பெற்றோர்களுக்கு இது தெரியும். இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் தற்போது இதை பதிவு செய்துள்ளேன்" என்றார்.

  மதுரையில் கல்யாணம்

  அது மட்டுமில்லை.. "வருகிற 5.7.2019 அன்று (வெள்ளிக்கிழமை,காலை 10 மணி) எங்களது திருமணம் மதுரையில் நடைபெற உள்ளது. இடம்: S.A திருமண மஹால், சூர்யா நகர், அழகர் கோவில் மெயின் ரோடு,K.புதூர், மதுரை-7. நண்பர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்-நந்தினி ஆனந்தன், குணா ஜோதிபாசு" என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

  வாழ்த்துவோம்

  இவ்வளவு கலகலப்பாக கல்யாணத்துக்கு தயாரான நந்தினி... இன்று ஜெயிலில் உள்ளார். நீதிமன்ற அவமதிப்பு காரணமாக மதுரை சிறையில் உள்ளதால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர். ஆனால் நந்தினி தனது பாதையில் தெளிவாகவே இருக்கிறார்.. நல்ல வாழ்க்கையுடன், சமூகப் பாதையிலும் சிறக்க நந்தினியை மனதார வாழ்த்துவோம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  The wedding is to be held on the 5th of Activist Nandhini. But she is currently being arrested for contempt of court
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more