சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழகத்தில் தாமரை மலரும்".. பொங்கல் வைத்த போது கோஷமிட்ட தொண்டர்கள்.. ஜெர்க்கான ஆளுநர் தமிழிசை!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் கொண்டாட்டத்திற்காக சென்னை வந்துள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பொங்கல் வைத்த போது தமிழகத்தில் தாமரை மலரும் என தொண்டர் ஒருவர் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை மற்ற தொண்டர்களும் தமிழிசையின் கணவரும் அடக்கினர்.

தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். ஜெயலலிதாவுக்கு பிறகு எத்தனையோ பெண் தலைவர்கள் அரசியலில் இருக்க இரும்பு பெண்மணி என பெயரெடுத்தவர்.

எதிர்க்கட்சிகளுக்கு தன்னுடைய கருத்தை நயமாகவும் நாசுக்காகவும் நாகரீகமாகவும் தெரிவித்ததில் தமிழிசைக்கு நிகர் அவரே. தான் அப்பதவியில் இருந்த நான்கரை ஆண்டுகளில் அவ்வப்போது சூடாக பதிலடிகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்.

என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்

ஆளுநராக நியமனம்

ஆளுநராக நியமனம்

இவர் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டமைக்காக கடந்த செப்டம்பர் மாதம் முதல் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

பேச இயலாத சூழல்

பேச இயலாத சூழல்

சமூகவலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் தமிழிசை குறித்து செய்திகள் வராத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் இயங்கி வந்தார். இந்த நிலையில் ஆளுநரான பின்னர் அவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும் என்பதால் அரசியல் குறித்து அவர் பேச இயலாத சூழல் எழுந்துள்ளது.

சென்னை வந்தார் தமிழிசை

சென்னை வந்தார் தமிழிசை

ஆளுநராக அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே அரசியல் குறித்து பேசுவதை தமிழிசை நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ளார் தமிழிசை.

தாமரை மலரும்

அவர் தனது கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பொங்கல் வைக்கும் வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் தமிழிசை பொங்கல் வைக்கும் போது பாஜக நிர்வாகி ஒருவர் தமிழகத்தில் தாமரை மலரும் என கோஷமிட்டார்.

நிர்வாகிகள் கண்டிப்பு

நிர்வாகிகள் கண்டிப்பு

இதனால் தமிழிசை ஜெர்க்கானார். பின்னர் தமிழிசையின் கணவர் சவுந்திரராஜனும் பிற நிர்வாகிகளும் அந்த நிர்வாகியை கண்டித்தனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Telangana Governor Tamilisai Soundararajan celebrates Pongal by making in the pot. At that time an activist raises slogan that Lotus will bloom in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X