சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருக்குறள் மூலம் தமிழக மக்களை கவர விரும்புகிறார் மோடி.. ஆனால் அவரது தொண்டர்கள்.. ஆனந்தராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை கவர நினைக்கிறார், ஆனால் அவரது தொண்டர்கள் செய்வதை பார்த்தால் அவரது முயற்சியை தடுப்பது போல் இருக்கிறதே என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.

Recommended Video

    Anandraj | Modi தமிழ்நாட்டை கவர நினைக்கிறார்.. ஆனா Cadre வேற மாதிரி இருக்காங்க | Oneindia Tamil

    ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்த நடிகர் ஆனந்தராஜ் அண்மையில் நீட் தேர்வு குறித்தும் திமுகவில் இணைவது குறித்தும் நிறைய விஷயங்களை பேசியிருந்தார்.

    இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

    குருபூர்ணிமா 2021: ஆடி வெள்ளியுடன் இணைந்த பௌர்ணமி நாளில் குருவின் ஆசி பெற்றால் என்னென்ன நன்மைகள்குருபூர்ணிமா 2021: ஆடி வெள்ளியுடன் இணைந்த பௌர்ணமி நாளில் குருவின் ஆசி பெற்றால் என்னென்ன நன்மைகள்

    ஆக்டிங் டூ அரசியல்

    ஆக்டிங் டூ அரசியல்

    கே: ஆக்டிங் டூ அரசியல் தற்போது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கிறீர்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப: எதுவாக இருந்தாலும் குரல் கொடுக்கிறேன் என்பது ஆதங்கம், கடமை. ஆனால் ஒரு காலத்தில் எல்லாவற்றுக்கும் மேடைகளில் பதில் கொடுத்து கொண்டிருந்தேன். அன்று நிகழ்ந்தவற்றை அன்றே பேசி வருவதால் மனதில் உள்ள வலி குறைந்துவிடும். ஆனால் இன்று அந்த வாய்ப்புகள் இல்லை. கொரோனா காலம், மேலும் நான் இருந்த கட்சியிலிருந்து விலகியிருக்கிறேன்.

    தொண்டன்

    தொண்டன்


    ஒரு தொண்டர் செய்கிற தவறு ஒட்டுமொத்த கட்சியை பாதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களை கவர வேண்டும் என்பதற்காக திருக்குறளை அடையாளம் காட்டுகிறார், மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழின் தொன்மையை குறித்து பேசி வருகிறார். தமிழகத்திற்கு வரும் போது வேட்டி சட்டையை அணிந்து கொள்கிறார்கள். இதெல்லாம் தமிழகத்து மக்களின் மனதை கவருவதற்காகத்தான்.

    ஆனால் இவர்கள் பேசியதெல்லாம் அப்படி கவருமா. அவரை தமிழக மக்களிடம் இருந்து விலக்கி விடுகிறது. அவரது கட்சி தொண்டர்கள் செய்யும் தவறு அவரது முயற்சியை தடுப்பது போன்று உள்ளது.

    நீட் தேர்வு அவசியமா

    நீட் தேர்வு அவசியமா


    கே: பிளஸ் 2 தேர்வையே ரத்து செய்துவிட்டார்கள். அவ்வாறு இருக்கையில் நீட் தேர்வு அவசியமா?

    ப: மக்களின் பார்வை தற்போது திரும்பி விட்டது. பிளஸ் 2 தேர்வுக்கு படிப்பதை விட்டுவிட்டு நீட்டுக்கு படிக்கிறார்கள். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த அரியலூர் அனிதா இறந்துவிட்டார். இதே அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் அந்த பெண்ணுக்கு இலவச மருத்துவக் கல்வியை கொடுத்திருப்பார்.

    அது போல் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதில் மார்க் குறைவாக இருப்பதால் பணம் செலுத்தி மருத்துவம் படிக்க சொல்கிறார்கள். நீட் தேர்வுக்கான விதிமுறைகள் சரியாக இல்லை.

    சினிமா தணிக்கை

    சினிமா தணிக்கை

    கே: நீட், மேகதாது, திரைப்பட தணிக்கை வரைவு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் போராடியே பெறுவதாக இருக்கிறது, இது குறித்து உங்கள் கருத்து என்ன?

    ப: சட்டம் என ஒன்று கொண்டு வரும் போது அதில் சாதக பாதகங்கள் இருக்கும். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்து வருகிறார். தங்களுக்கு ஒரு திட்டம் வேண்டாம் என்றால் அதை போராடித்தான் பெற வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து அதற்கான குழு முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்து கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

    திமுகவில் எப்போது

    திமுகவில் எப்போது

    கே: அதிமுக, அமமுக, சசிகலா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும் என்றீர்கள். தற்போது திமுகவில் அழைத்தால் செல்வேன் என்கிறீர்களே

    ப: சேர்ந்த ஒரு வாரத்தில் அந்த கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சிக்குச் செல்கிறார்கள். ஆனால் நான் போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டேன். மக்களுக்கு நல்லது செய்ய ஒரு சட்டையை போட்டுக் கொண்டால்தான் முடியும் என்றால் அதை போட்டுக் கொள்வதில் தவறில்லையே. நான் விரும்பினாலும் என்னை ஏற்றுக் கொள்வதும் இவர் எந்த நேரத்தில் வந்தால் சரியாக இருக்கும் என்பதை திமுகதான் முடிவு செய்யும்.

    சசிகலா அவசரம் வேண்டாம்

    சசிகலா அவசரம் வேண்டாம்

    சசிகலா சிறையிலிருந்து வந்து தற்போது தொண்டர்களுடன் பேசுவதை நான் குறையாக சொல்லவில்லை. இது சரியான நேரம் இல்லை, அவசரப்பட வேண்டாம் என்றுதான் சொன்னேன். அமைதியான போக்கை அன்றே கடைப்பிடித்திருந்தால் அவர் சிறைக்கே சென்றிருக்க மாட்டார்.

    எம்ஜிஆர், ஜெ, கருணாநிதி

    எம்ஜிஆர், ஜெ, கருணாநிதி

    கே: எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா குறித்து ஒரே வரியில் சொல்லுங்கள்

    ப: எம்ஜிஆர் - மக்களுடைய நாடித்துடிப்பை பிடித்து வாழ்ந்தவர்
    கருணாநிதி- சுயநீதி, சுயமரியாதை என்ற பாரம்பரியத்தில் அறிஞர் அண்ணாவின் தம்பியாக இருந்தவர். அவர் கற்று கொடுத்த பாடத்தை கற்றவர். மக்களை கவர நினைக்காமல் மாநிலத்துக்கு எது தேவையோ அதை பார்த்து நல்லாட்சியை கொடுத்தார்.
    ஜெயலலிதா- அப்படியே எம்ஜிஆர் மாதிரி. ஏழைக்கு என்ன கொடுத்தால் சரியாக இருக்கும் என நினைத்து செய்தவர். அதனால் அவர் ஏழைகளின் மனதில் இருந்தவர்.

    கம்மல்

    நீட் தேர்வில் மாணவிகளின் ஆடை விவகாரத்தில் அவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். துப்பட்டாவை எடுக்கச் சொல்வது இதெல்லாம் ஒரு விதமான வன்கொடுமைதான். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க இன்று எத்தனையோ கருவிகள் வந்துவிட்டன. அதை பயன்படுத்தாமல் துப்பட்டா போடக் கூடாது, கம்மல் போடக் கூடாது என்பதும் வன்கொடுமைதான். இது குறித்து வழக்குப் பதிவு செய்வது குறித்து எனது வழக்கறிஞர்களிடம் பேசி வருகிறேன் என்றார் ஆனந்த்ராஜ்.

    English summary
    Actor Anandaraj says that PM Narendra Modi wants to attract Tamilnadu people by citing Thirukkural.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X