சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெற்றிலை, பாக்கு, சீவல் போல .. காலாகாலத்துக்கும் நின்று மணம் வீசும்.. கிரேஸியின் காமெடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Crazy Mohan: கமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேஸி மோகன் உயிர் இழந்தார்- வீடியோ

    சென்னை: தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

    நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார்.

    அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    "டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்!

    வசனகர்த்தா

    வசனகர்த்தா

    இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி!

    ட்ரேட் மார்க்

    ட்ரேட் மார்க்

    லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!

    பஞ்ச் & டச்

    பஞ்ச் & டச்

    ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச் & பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்.

    பிரார்த்தனை

    பிரார்த்தனை

    இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர்.

    கமலஹாசன்

    கமலஹாசன்

    கிரேஸி மோகன் சீரியஸ் என்ற தகவலை கேட்டதும் கமல்ஹாசன் நேரடியாக ஆஸ்பத்திரிக்கே சென்றுவிட்டார். அங்கு அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது.

    மணம் வீசும்

    மணம் வீசும்

    கிரேஸி மோகன்.. எத்தனையோ பேரின் மன பாரத்தை குறைத்தவர்.. தன் அசால்ட் வார்த்தைகளால் டென்ஷன், பிரஷரை தூக்கி தூக்கி எறிய செய்தவர். இது பலருக்கும் கிடைத்திராத ஒரு அரிய வரப்பிரசாதமே! அவரது நாடகங்கள், கமெடிகள், வசன தெறிப்புகள் எல்லாமே அவரது வெற்றிலை, பாக்கு, சீவல் போல காலங்காலத்துக்கும் நின்று மணம் வீசும்!

    English summary
    Playwright and actor Crazy Mohan dies due to Severe Cardiac Arrest in Chennai Cauvery Hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X