Biggoss Dinesh: நான் கைதாகவில்லை! என் மீதான FIR ரத்து! ரச்சிதா முன்னாள் கணவர் தினேஷ் புதிய வீடியோ!
சென்னை: நான் கைது செய்யப்பட்டிருப்பதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் என் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நடிகர் தினேஷ் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இவர் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் முன்னாள் கணவராவார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இவர் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியிட்டிருந்தார். நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தினேஷ் மீது கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் அரசு வேலை வாங்கித் தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ 3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை கேட்ட போதும் கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை அக்டோபர் மாதம் தாக்கினார் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தான் கைது செய்யப்படவில்லை என நடிகர் தினேஷ் பேட்டி அளித்திருந்தார்.
அவர் அளித்த பேட்டியில், இன்று (13ஆம் தேதி நவம்பர்) காலையில் இருந்து என்னை பற்றி ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு. நான் போலீஸால் கைது செய்யப்படவில்லை. என் மீது கொடுக்கப்பட்ட புகாரும் உண்மைக்கு புறம்பானது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஒரு நபர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோசடி வழக்கை நான் தொடர்ந்து தற்போது வரை அந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
என் மீது புகார் கொடுத்த நபர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அந்த நபரை தாக்கியதாக புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த நபர் சொன்ன தேதியில் அதே நேரத்தில் நான் நீதிமன்றத்தில் சில மணி நேரம் இருந்தேன். பின்னர் எனது வழக்கறிஞருடன் காரிலும் சென்று கொண்டிருந்தேன். இதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது.
இன்று காலை போலீஸ் அதிகாரி என்னிடம் விசாரிக்க வந்த போது நான் அனைத்து ஆதாரத்தையும் காட்டினேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பணகுடி போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த புகாரில் நானும் என் அப்பாவும் சேர்ந்து அந்த நபரை தாக்கியதாக தெரிவித்துள்ளார். எனது அப்பாவுக்கு 75 வயதாகிறது. அத்தனை வயதானவர், ஒருவரை எப்படி தாக்க முடியும். இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. பணகுடி கிராமத்திற்கு அருகில் "நாய்க்குட்டி" என்ற படத்தில் நடித்திருக்கும் செல்வின் என்ற நடிகரால்தான் இது போன்ற பொய் வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது.
என் பெயரை கெடுக்க சதி செய்கிறார்கள். ஒரு புகாரை கொடுத்தால் ஒரு வாழ்க்கையே முடிந்துவிடும் என எண்ணுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் நடக்காது, நான் எதையும் சட்டப்படி சந்திப்பேன் என தெரிவித்திருந்தார்.
தான் கைது செய்யப்படவில்லை என அப்போதே தினேஷ் விளக்கம் கொடுத்திருந்தாலும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தினேஷ் ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் தாக்குதல் நடத்தியதாக ஒரு நபர் போலி புகார் கொடுத்திருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தில் நான் ஒரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இருந்தேன். இதை ஆதாரமாக காண்பித்ததால் போலீஸார் ஏற்றுக் கொண்டனர்.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என எப்போதும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள், போனில் லொகேஷன் ஹிஸ்டரி ஆன் செய்து வையுங்கள், எங்கு போனாலும் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள், காரில் dashcam ஆன் செய்து வையுங்கள். அப்போது தான் இப்படி பொய் புகார் வந்தால் சட்டப்படி உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என தினேஷ் தெரிவித்துள்ளார்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications