சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவியேற்பு விழாவுக்கு நாங்க கமலை கூப்பிடவே இல்லையே.. பாஜக என்ன இப்படி சொல்லுது!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal not called for Modi oath | பதவியேற்பு விழாவுக்கு நாங்க கமலை அழைக்கவில்லை: பாஜக- வீடியோ

    சென்னை: மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கவே இல்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நாளை பதவியேற்கிறார். நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பதவியேற்கவுள்ளார்.

    இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அண்டை நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா! என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா!

    பதவியேற்பு விழா

    பதவியேற்பு விழா

    இதேபோல் மோடியின் பதவியேற்பு விழா அழைப்பை ஏற்று மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக சார்பில் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    ரஜினி பங்கேற்பு

    ரஜினி பங்கேற்பு

    ரஜினியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    யார் பரப்பியது?

    இந்நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனுக்கு பாஜக இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    திமுக தகவல்

    மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியானது. ஆனால் பதவியேற்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை என திமுக நேற்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The BJP has stated that the Actor Kamalhaasan not called to take part in Modi's swearing-in ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X