சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கிரிட்டிக்கல் ஆக உள்ளார்.. நலமாக உள்ளார் என சொல்ல முடியாது" எஸ்பிபி உடல்நலம் குறித்து கமல் பேட்டி

எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரிக்க ஆஸ்பத்திரிக்கு விரைந்தார் கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வௌயிட்டிருந்தது.. இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விரைந்து சென்று எஸ்பிபி உடல்நலன் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

கடந்த சில நாட்களாகவே சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்பிபி.. அவரது உடல்நிலை சற்று தேறி வந்தது.

 Actor Kamalhasan visits Hospital to enquire SPB Health conditions

இந்நிலையில், திடீரென ஆஸ்பத்திரி இன்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டது.. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. அவர் குணமாகி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.. அங்கு சென்ற அவர், எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை

பின்னர், ஆஸ்பத்திரியில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது... அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் நம்பும் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.. கிரிட்டிக்கல் ஆக இருக்கிறார், ஆனால், நலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது" எனக்கூறினார்.

எஸ்பிபியின் மிக நெருங்கிய நண்பர் கமல்ஹாசன்..இவர்களின் இருவரின் திரை வருட பயணம் நீண்ட நெடுமையானது. எஸ்பிபி ஆஸ்பத்திரியில் சீரியஸாக உள்ளார் என்று சில தினங்களுக்கு முன்பும் ஒரு தகவல் வெளிவந்தபோது, கமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

என் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனாஎன் வீட்டை இடிக்க காட்டிய ஆர்வத்தை பிவாண்டியில் காட்டியிருந்தால் 41 உயிர் போயிருக்காது.. கங்கனா

அதில், "அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா" என்று தெரிவித்திருந்தார்.. தற்போது, அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கமல் திடீரென ஆஸ்பத்திரிக்கு விரைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது..

English summary
Actor Kamalhasan visits Hospital to enquire SPB Health conditions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X