• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாட்டு பாடினாதான் ஓட்டு.. அப்படியா சரி.. வெத்தலபோட்ட சோக்குல பாட்டு பாடிய நடிகர் கார்த்திக்!

|
  அப்பவே தாமரையை மலர வைத்தவர் தான் கார்த்திக் - தமிழிசை- வீடியோ

  கோவில்பட்டி: பாட்டு பாடினாதான் ஓட்டு போடுவோம் என்றதும் வெத்தல போட்ட சோக்குல பாட்டு பாடி நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார்.

  பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கிய நடிகர் கார்த்திக், எப்போதாவது தேர்தல் வரும் போது வெளியே தலைகாட்டுவார். தற்போது அண்மையில் மனித உரிமை காக்கும் கட்சி என பெயர் மாற்றம் செய்த அவர் இனி அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

  ஆஹா பரவாயில்லையே கார்த்திக் எதோ புது அவதாரம் எடுக்க போகிறார் என்று நினைத்திருந்த அவரது கட்சியினருக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

  சென்னையில் பயங்கரம்.. அப்படியே விழுந்து அமுக்கிய வீட்டின் மேல் தளம்.. தாய், மகள் பரிதாப பலி

  தேர்தல் பிரசாரம்

  தேர்தல் பிரசாரம்

  இதையடுத்து லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என ஒரு அறிவிப்பை வெளியிட்டு அந்த சந்தோஷத்தில் மண் அள்ளிபோட்டு விட்டார் இந்த "சந்திரமௌலி". தற்போது அதிமுக கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார்.

  கோவில்பட்டியில் பிரசாரம்

  கோவில்பட்டியில் பிரசாரம்

  பாஜக சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் அதிமுக கூட்டணியில் நான் சேரக் கூடாது என ஒரு கும்பல் வேலை செய்தது.

  தாமரை சின்னம்

  தாமரை சின்னம்

  இப்படி செய்யும் கோழைகளால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. உங்களுக்கு இவர்களால் எல்லாம் நல்லதும் செய்ய முடியாது. நல்லவர்களுக்கு, வல்லவர்களுக்கு, தேசப்பற்றுள்ளவர்களுக்கு தமிழகத்தை நேசிப்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். தயவு செய்து தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

  அனைத்தும் பிடிக்கும்

  அனைத்தும் பிடிக்கும்

  டாக்டர் தமிழிசை என்ற பெயர் சங்கீதம் போல் இருக்கிறது. நான் அவரை நேரில் பார்க்கும் முன்பே தொலைக்காட்சிகளில் பார்த்து இருக்கிறேன். நான் தமிழிசையின் ரசிகன், அவரின் கம்பீரம், அடக்கம், நாகரீகம், பேசும் தன்மை, உண்மை என அனைத்தும் பிடிக்கும்.

  நல்லது கெட்டது

  நல்லது கெட்டது

  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உண்மையின் அருமை எப்படித் தெரியும். கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நல்லது கெட்டது எப்படி தெரியும் என பேசினார் கார்த்திக்.

  அமரன் பட பாடலை பாடிய கார்த்திக்

  அமரன் பட பாடலை பாடிய கார்த்திக்

  நடிகர் கார்த்திக் வடக்குதிட்டங்குளம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பிரச்சாரம் மேற்கொண்டு பேசும்போது, " நீங்கள் பாட்டு பாடினால் தான் ஓட்டுப்போடுவோம்' அங்கிருந்த மக்கள் கூறியதால், அமரன் படத்தில் இருந்து ‘வெத்தல போட்ட' என்ற பாடலை நடிகர் கார்த்திக் பாடினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Actor Karthik asks vote in Kovilpatti for BJP Candidate Tamilisai by singing song from Amaran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more