சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக்.. புதுக்கட்சி தொடங்கினார்!

நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்று புதிய கட்சியை நேற்று தொடங்கி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.

    சென்னை: நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்று புதிய கட்சியை நேற்று தொடங்கி உள்ளார்.

    2009ல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் நடிகர் கார்த்திக். அதில் இருந்து பிரிந்த கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

    இந்த நிலையில் தற்போது அந்த கட்சியை கலைத்துவிட்டு புதிய கட்சியை கார்த்தி தொடங்கி உள்ளார்.

    கட்சி

    கட்சி

    இந்த புதிய கட்சிக்கு மனிதர் உரிமை காக்கும் கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. நாடாளும் மக்கள் கட்சி இதனால் மொத்தமாக கலைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று இரவுதான் இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டது.

    கொடி வண்ணம்

    கொடி வண்ணம்

    சிவப்பு நிற கொடியில் வெள்ளை கோடுகள் இந்த கொடியில் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல் இடையில் உள்ள மஞ்சள் நிறத்தில் முத்துராமலிங்க தேவரின் புகைப்படம் இடப்பெற்றுள்ளது. நேற்று கட்சி அறிவிப்பின் போது, இந்த கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதே உறுப்பினர்கள்

    அதே உறுப்பினர்கள்

    நாடாளும் மக்கள் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் எல்லோரும் இந்த கட்சியிலும் இருக்கிறார்கள். அதே உறுப்பினர்கள் இதிலும் தொடர்வார்கள் என்று கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்த கட்சியை விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

    கருத்து தெரிவித்தார்

    கருத்து தெரிவித்தார்

    அதோடு இதுகுறித்து பேட்டியளித்த கார்த்திக், இன்றில் இருந்து நான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்று தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தூத்துக்குடி ஸ்டெர்லைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மக்களுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கார்த்திக் தெரிவித்தார்.

    English summary
    Actor Karthik launches his new party named Manitha Urimai Kakkum Katchi and Dissolves his Nadalum Makkal Katchi party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X