சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரகிட ரகிட ரகிட.. நிவர் புயலின் நடுவில் நடுரோட்டில் மன்சூர் அலிகான் படகு சவாரி வீடியோ வைரல்!

Google Oneindia Tamil News

சென்னை: மன்சூர் அலிகான் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததை அடுத்து அவருக்கே உரிய ஸ்டைலில் ரகிட ரகிட ரகிட பாடலை பாடிக் கொண்டு படகில் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. இதனால் நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நேற்றைய தினம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில் நடிகரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகானின் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது.

8 மாதமாக

இதையடுத்து அவர் படகு போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு துடுப்பையும் எடுத்துக் கொண்டு படுத்தபடியே ரகிட ரகிட பாடலை பாடினார். பின்னர் அவர் பேசுகையில் புயல் கடக்கட்டும், 8 மாதமாக கொரோனா என்ற பெயரிலே மக்கள் வாழ்க்கை நடத்திவிட்டார்கள்.

 ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள்

இந்த புயலோடு துக்கங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட வேண்டும். நன்றி வணக்கம் என கூறிய அவர் படகில் மிகவும் ஜாலியாக பயணம் செய்தார். அப்போது அவர் பாம்பே படத்தில் வரும் உயிரே உயிரே பாடலை புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டுவிடு... ஏற்கெனவே ஆட்சியாளர்கள் தவிட்டுக்கு வித்துட்டாங்களே...

வாழ்க்கை

வாழ்க்கை

ஆ ரகிட ரகிட ரகிட என என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும். ஆட்சியாளர்கள் மக்களைத்தான் சந்தோஷமா வைக்கணும்.. ரகிட ரகிட... ரகிட என்னவேணா நடக்கட்டும், நாம சந்தோஷமா வாழனும், ஆள்றவங்க மக்களை சந்தோஷமா வைக்கணும் .. ரகிட ரகிட.. ரகிட மீனவங்க வாழ்க்கையை கொஞ்சம் வாழத்தானே வைக்கணும்.. ரகிட ரகிட....

வெள்ளம்

வெள்ளம்

வெளிய போக முடியலையே, வீட்டுக்குள்ளே கிடக்குறோமே , வீட்டுக்குள்ளே கடல் அலைதான் எங்கதானே போறது.. ரகிட ரகிட.. ரகிட வாழ்ந்தா ராஜாவாத்தான் வாழுவேன் என பாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. செம ஸ்டைலாக மழை வெள்ளத்தை ரசிப்பதோடு மக்கள் படும் அவதியையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

English summary
Actor Mansoor Ali Khan rides boat in his residential complex after rain water logging. He sings Ragita Ragita song by saying people's woes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X