• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒத்த செருப்பு விவகாரம்.. ட்விட்டரில் திமுக எம்.பி.செந்தில்குமாருக்கு பதில் சொன்ன நடிகர் பார்த்திபன்

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் சேருவது தொடர்பாக திமுக லோக்சபா எம்.பி. டாக்டர் செந்தில்குமாருக்கு நடிகர் பார்த்திபன் பதில் கொடுத்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு மத்திய அரசு அண்மையில் விருது அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்... என பதிவிட்டிருந்தார் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்.

இதற்கு நடிகர் பார்த்திபன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள பதில்:

'இரவின் நிழல்'என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!

மலரும் வார்த்தை

மலரும் வார்த்தை

மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க) பாரா'ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் "அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்"என்று sweet-ஆக tweet-ட்டிருக்கிறார்.செகு அண்ணனுக்கு செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்!

ஒத்த செருப்பு பார்சல்’

ஒத்த செருப்பு பார்சல்’

தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்' என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that) அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம் !----___________________________________________ திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.

கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும்

கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும்

இவன் ‘ படத்தில் "seat குடுத்தா நிப்பீங்களா?"என என்னிடம் கேட்க," Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?'என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்!

உதயநிதி பெருந்தன்மை

உதயநிதி பெருந்தன்மை

உரியது கிடைக்காத போது ஆனந்த'மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் "தா"இதைத் "தா" வென மரை'முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்'பேத்தாதீங்க பாஸ்!!! கடைசியாக செய்தி சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையான நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

English summary
Actor Parthiban tweets for the Comment on he may join to BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X