சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகைகள் பற்றி சர்ச்சை பேச்சு.. திமுகவிலிருந்து ராதாரவி அதிரடி சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: திமுகவிலிருந்து நடிகர் ராதாரவி தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    நயன்தாரா நடப்பில் வெளியாகும், 'கொலையுதிர்' காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து காரணமாகத்தான் இந்த நீக்கம் நடந்துள்ளது.

    Actor Radha Ravi suspended from DMK

    ராதாரவி பேசும்போது, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கே.ஆர்.விஜயவாவை மட்டும் அம்மன் வேடங்களுக்கு நடிக்க வைப்பார்கள். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம், என்றார்.

    மேலும் 'மீடு' விவகாரம் குறித்தும் பேசிய அவர், நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பிறகு பிரச்னைகள் வராது என்றார்.

    நான் பாதுகாவலனாக முடியாது.. ஏனென்றால் நான் பிராமணன்.. சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு நான் பாதுகாவலனாக முடியாது.. ஏனென்றால் நான் பிராமணன்.. சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை பேச்சு

    நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகைகள் குறித்து தொடர்ந்து இப்படித்தான், ராதாரவி பொது மேடைகளில் தரக்குறைவாக பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    Actor Radha Ravi suspended from DMK

    இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ட்வீட்டில், ராதாரவி மீது நடவடிக்கை எடுக்ககோரி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பிய நீங்கள் ராதாரவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    இந்த நிலையில், ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ராதாரவி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Radha Ravi suspended from DMK, says a press release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X