சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் இன்னும் எத்தனை தேர்தல்கள் காத்திருப்பது, எங்களுக்கு வயசு ஆகுதுல்ல என குமுறி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், அரசியலில் யாருக்கு ஓட்டு பேட வேண்டும் என கருத்து தெரிவிப்பார். ஆனால் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை மறுத்துவிடுவார்.

இப்படியே 1996ம் ஆண்டில் இருந்து அரசியல் பேசும் ரஜினி, ஒருவழியாக அரசியலுக்கு வருவதாக அறிவத்தார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட தேர்தலில் இறங்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியலுக்கு வருவதாக ரஜினி வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர் ரஜினி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

கட்சி பலம்

கட்சி பலம்

இந்த ரஜினி மக்கள் இயக்கத்தை தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கினார். இந்தபணிகளை செய்து கொண்டே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு கபாலி, காலா, 2.0, பேட்ட என நான்கு படங்கள் வந்துவிட்டன. இப்போது ரஜினி தர்பார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நீண்ட பயணம்

நீண்ட பயணம்

ஆனால் ரஜினியாவது அரசியலுக்கு வருவதாக அறிகுறிகளை சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரது நண்பர் கமல் எந்தவிதமுன்னறிவிப்பும் இன்றி அரசியலில் இறங்கினார். இப்போது தேர்தலிலும் இறங்கி நீண்ட தூரம் பயணித்து கொண்டு இருக்கிறார்.

தண்ணீர் பிரச்சனை

தண்ணீர் பிரச்சனை

இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்கு என கேட்டதற்கு, கருத்து தெரிவித்த ரஜினி, தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறினார்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் அதாவது இன்று, ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும், எப்போது சட்டசபை தேர்தல் வருகிறதோ அப்போது களத்தில் இறங்குவேன் என்றும் பதில் அளித்தார்.

 ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

நடிகர் ரஜினி சொல்வது படி பார்த்தால் 2021ம் ஆண்டு தான் சட்டமன்ற தேர்தல் வரும் எனவே இன்னும் அவரது ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இன்னும் எத்தனை தேர்தல்கள் இப்படியே காத்திருப்பது என்று ரஜினியின் பேட்டிக்கு பின் ரசிகர்கள் சிலர் புலம்புவதையும் பார்க்க முடிந்தது.

ஒட்டு கேட்பார்கள்

ஒட்டு கேட்பார்கள்

அதில் ரசிகர் ஒருவர் கூறுகையில், ரஜினி சார் நீங்க நிச்சயம் எங்களை ஏமாற்ற மாட்டீங்க ஆனால் நாங்க ஏமாந்துதிடுவோமோ என்று தோணுது, ஏன்னா 2021இல் நாங்க உங்க கூட ஓட்டுக்கு கேட்டு வருவோமோ தெரியாது. ஆனால் எங்க பேரங்க உங்களோட ஒட்டுக் கேட்க வருவாங்கயா... என கூறியுள்ளார்.

English summary
rajini fans worry about his latest interview of political entry on 2021 assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X