சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்மீக அரசியல் Vs பிகே அரசியல்.. திமுகவை புரட்டியெடுக்க திட்டம் போடும் ரஜினி.. பிரேக் போடுவாரா பிகே?

திமுகவை நேரடியாக குறி வைக்கிறாரா ரஜினி என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: பொதுவாக போட்டா போட்டி என்றால் திமுக-அதிமுகவுக்கும் இடையேதான் நடக்கும்.. ஒருத்தரை ஒருத்தர் டார்கெட் செய்து மற்றொருவரை தோற்கடிப்பார்கள்.. இதுதான் வரலாறு.. ஆனால் இப்போது நடக்கிறதை எல்லாம் பார்த்தால் திமுகவுக்கும் - ரஜினிக்கும்தான் போட்டி என்பதுபோல உள்ளது.. இன்னும் சொல்ல போனால் ரஜினிகாந்த் திமுகவை மட்டுமே குறி வைத்து காய் நகர்த்துவது போலவும் உள்ளது!

ரஜினிகாந்த்தை பொறுத்தவரை அதிமுக மீது மேலோட்டமான குறை இருந்தாலும், அடியோடு தோற்கடிக்க வேண்டும் என்ற பெரிய அளவுக்கு ஆதங்கம் இல்லை.. லீலா பேலஸில் ரஜினி பேசியது குறித்து அம்மா நாளிதழில் கட்டுரை எழுதியபோதும்கூட அதை ரஜினியும் கண்டுகொள்ளவுமில்லை.

ஆனால் திமுக மட்டுமே ரஜினிக்கு டார்கெட்டாக தெரிகிறது.. எப்போது துக்ளக் விவகாரம் வெடித்ததோ அப்போதே லேசாக முரசொலியை தட்டி பார்த்து, உடன்பிறப்புகளை உசுப்பேற்றியதில் இருந்தே ஆரம்பமாகி விட்டது.. விழாவில் சோ-வை பற்றி மட்டும் புகழ்ந்து பேசிவிட்டு வராமல் திமுகவை ஒரு வாரு வாரியிருந்தார்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால் திமுக-வை இந்துக்களுக்கு எதிரான ஒரு கட்சியாகவே சித்தரித்து பேசியது போல இருந்தது..

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

லீலா பேலஸில் பேசும்போது ஸ்டாலின் மீதான காழ்ப்புணர்ச்சி நேரடியாகவே வெளிப்பட்டது.. வாழ்வா, சாவா என்ற கேள்வியை கேட்டு மிக மோசமாக ஸ்டாலினை அசிங்கப்படுத்தி கேள்வி எழுப்பியிருந்தார் ரஜினி... இதோடு விட்டாரா என்றால் இல்லை.. சாணக்யா விழாவிலும் திமுகவை சாடினார்.. கருணாநிதி முதல்வராக எம்ஜிஆர் ஒரு காரணம், கணக்கு கேட்டதால் அவரை தூக்கி எறிந்தார்கள் என்றார். இப்படி எந்த விழா என்றாலும் திமுக, ஸ்டாலின், பெரியார் என்றே ரஜினி குறி வைத்து பேசி வருகிறார்... இதற்கு என்ன காரணம்? இது ஒன்றே ஒன்றுதான்.. தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதே திமுகதான் என்று ரஜினி உணர்ந்துள்ளதாலேயே இப்படி பேசுகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தாக்கம்

தாக்கம்

ஊழல், குபேரன், டெண்டர் போன்றவை குறித்து என்னதான் கூவி கூவி குற்றம் சொன்னாலும் அது சாதாரண குறையாகவே மக்களுக்கு தெரியும்.. ஆனால் இன, மத ரீதியாக தொட்டால் அது பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடும்.. அதைதான் ரஜினி கையில் எடுத்துள்ளார்...ரஜினி மட்டுமில்லை, அவருக்கு ஆதரவாக உள்ளவர்கள் கராத்தே தியாகராஜனும் சரி, தமிழருவி மணியனும் சரி.. சொல்லி வைத்தது போலவே பேசி வருகிறார்கள்.. எச்.ராஜா சொல்ல வேணாம்!!

ரஜினி டீம்

ரஜினி டீம்

திமுகவுக்கு எதிராக வேலை செய்வது இப்போதைக்கு ரஜினி டீம்தான் என்பதே உண்மை.. அதிமுகவை விட பல மடங்கு களப்பணியில் இறங்கி உள்ளனர்... ஆனால் இதையெல்லாம் திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. தங்களுக்கு ஈடு ரஜினி இல்லை என்பதை வெளிப்படுத்தி கொண்டாலும், உள்ளுக்குள் ரஜினியைநினைத்து ஒரு கலக்கம் இருக்கவே செய்கிறது... நேரடியாக திமுக தரப்பு இதை காட்டி கொள்ளவில்லை என்றாலும், ஆனால் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி ரஜினிகாந்த் குறித்த ட்வீட், பேட்டிகளை காரசாரமாக தந்து கொண்டுதான் இருக்கிறார். அதனால் ரஜினியை முற்றிலும் திமுக கண்டுகொள்ளவில்லை என்று சொல்லிவிட முடியாது.

பிகே டீம்

பிகே டீம்

மற்றொரு பக்கம் இந்து மதத்துக்கு ஆதரவானவர் என்ற பிம்பம் ரஜினிகாந்த் மீது இருப்பதால், அந்த பிம்பத்தை தானும் அடைய பிகே டீமும் முயன்று வருகிறது.. அதேபோல கூட்டணியே வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்று சொல்லி வருகிறார் பிகே.. அப்படியே கூட்டணி வைத்தாலும் திமுக சின்னத்திலேயே அவர்களை போட்டியிட வைக்க வேண்டும் என்று சொல்ல, இதற்கு மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பும் சொல்லி வருகின்றனர்... இதற்கு காரணம் ரஜினிதான்... ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளதால், கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சீனியர்கள் சொல்லி வருகின்றனர்... அதனால் அவர்களின் டார்கெட்டும் ரஜினிகாந்த்தான்!!

பாமக

பாமக

எப்படியாவது இந்த முறை ஆட்சியில் ஏறிவிட வேண்டும் என்று மிக மிக கவனத்தோடு திமுக காய் நகர்த்தி வருகிறது.. அதேபோல எப்படியாவது ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ரஜினி டீம் இறங்கி வேலை செய்கிறது.. இதற்காக பாமகவின் உதவியும் ரஜினிகாந்த்துக்கு அமோகமாக கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

English summary
politics between rajinikanth and dmk, there is doubt as to whether Rajini is directly targeting the DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X