சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏசிஎஸ்ஸுக்கு வாய்ஸ் தர போறாராமே.. ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்க போகுதோ!

வேலூர் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி அரசியல் பிரவேசம் வேலூரிலிருந்து தொடங்குமா?- வீடியோ

    சென்னை: இதோ, அதோ என்று சொல்லி கொண்டிருக்கும் ரஜினியின் அரசியல் என்ட்ரி வேலூரில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

    தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தனது முடிவை கன்பார்ம் பண்ணி ரஜினி சொல்லி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையேதான், ஒருசில முக்கிய பிரமுகர்கள் ரஜினியை சந்தித்து பேசி வருகிறார்கள்.

    அதில் வருஷாவருஷம் தவறாமல் பேசிவருவது அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ்தான். இவர்கள் என்னதான் பேசி வருகிறார்கள் என்று இதுவரை நமக்கு தெளிவாக தெரியவில்லை.

     8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா? 8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா?

    ரஜினி மக்கள் மன்றம்

    ரஜினி மக்கள் மன்றம்

    இப்போது வேலூர் தொகுதி தேர்தலில் ரஜினியின் பெயர் நிறையவே அடிபட்டு வருகிறது. சமீபத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ரஜினி சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசித்ததாக கூறப்பட்டது. இப்போது, ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றத்தினர் களம் இறங்க உள்ள போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    இதனிடையேதான், வட மாவட்டங்களில் தலைவிரித்தாடிய தண்ணீர் பஞ்சத்தை முதலில் கையில் எடுத்ததே ரஜினி மன்றத்தினர்தான். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் எல்லாரும் கலந்து பேசி, "கண்ணீரை தடுக்க தண்ணீரை சேமிப்போம்" என்கிற பெயரில் சோளிங்கரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    மேலும் மன்றத்தின் சார்பில், சொந்தமாக தண்ணீர் லாரி வாங்கி, எந்தெந்த இடங்களில் தண்ணீர் பஞ்சமோ அங்கே லாரியை அனுப்பி 25 லிட்டர் தண்ணீர் தந்து வருகிறார்கள். இதனால் வட மாவட்டங்களில் ரஜினியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இது எதேச்சையான ஒன்று என்றாலும், வேலூர் தேர்தலுக்கு முக்கியமான முத்தாய்ப்பான விஷயமாக இது அமையும் என்கிறார்கள்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    ரஜினி வேலூர் தொகுதிக்கு ஆதரவு தருகிறாராமே என்று அமைச்சர் ஜெயக்குமாரை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு "யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது" என்று சொன்னாரே தவிர, உறுதியாக இல்லை என்றோ, அல்லது ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை என்றோ அமைச்சர் சொல்லவில்லை. கடந்த காலங்களில் ரஜினி, கமலை அதிகமாக விமர்சித்தவர்களில் தமிழக அமைச்சர்களே அதிகம்!

    கேஎஸ் அழகிரி

    கேஎஸ் அழகிரி

    ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரியோ, ரஜினி வருகை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். "வேலூரில் தியேட்டர்கள் நிறைய இருக்கின்றன. அதனால் ரசிகர்கள் ரஜினி படத்தை திரையிட்டு பார்க்கட்டும். ஆனால் தேர்தலை பொறுத்தவரை ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை முதலில் ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும்.

    ரசிகன்

    ரசிகன்

    எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவில் யாருமே அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம். இதை நான் அவருடைய ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று அரசியலுக்கு வரவேண்டாம் என்பதை ஓபனாகவே சொல்லி விட்டார்.

    புஸ்வாணம்?

    புஸ்வாணம்?

    அதனால், அதிமுகவில் கூட்டணியில் உள்ளதால் பாஜகவுக்காக களம் இறங்க ரஜினி முடிவு செய்துள்ளாரா, அல்லது வேலூர் தொகுதியில் அரசியல் என்ட்ரி ஆரம்பமாகுமா, அல்லது வழக்கம்போல் இதுவும் புஸ்வாணமாகி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    TN congress leader KS Azhagiri requests that Actor Rajinikanth do not come to politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X