சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டாய இந்தி திணிப்பு.. கொந்தளித்த தமிழகம்.. வழக்கம் போல ரஜினி கப்சிப்!

இந்தி திணிப்பு விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி காத்து வருகிறார்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்புக்கு எதிராக கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்!- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்த் வழக்கம் போல கப்சிப். எதுவுமே பேசவில்லை. அமைதியாக இருக்கிறார்.. வேறு எதில், கட்டாய இந்தித் திணிப்பு விவகாரத்தில்தான்.

    இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கூட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

    தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏன் அதிமுக கூட கோபம் காட்டியிருந்தது. ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேன் என்று காத்திருக்கும் ரஜினி மட்டும் வழக்கம் போல இதில் எதுவும் சொல்லவில்லை.

    தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்!தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு.. முழு நேரத்துக்கு மாறாமல் பிக் பாஸுக்கு போனால் எப்படி கமல் சார்!

    நிலைப்பாடுகள்

    நிலைப்பாடுகள்

    ரஜினி ரொம்ப வித்தியாசமாக இருக்கிறார். மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ரொம்ப அந்நியமாக நிற்கிறார். இது தெரிந்து நடக்கிறதா அல்லது எதேச்சையாக நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள், நிலைப்பாடுகள் உடனடியாக வருவதில்லை.

    அரசியல்

    அரசியல்

    ரஜினி ஒரு சாதாரண நடிகராக இருந்திருந்தால் அவரை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அரசியலுக்கு வரப் போவதாக ஒரு வருடத்திற்கு முன்பு சொன்னவர் அவர். அவரை வைத்து கடந்த 25 வருடமாக அரசியலும் செய்து கொண்டுள்ளனர் பலர். இதனால்தான் மக்கள் பிரச்சினைகளில் அவரது கருத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    ஆனால் ரஜினியோ மக்கள் பிரச்சினைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதில்லை அல்லது அதில் கருத்து சொல்வதில்லை அல்லது குழப்பமாக சொல்லி விட்டுப் போய் விடுகிறார். இப்போது கூடஇந்தித் திணிப்பு விவகாரம் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த நிலையில் அதுகுறித்து ரஜினி தரப்பு பேசவே இல்லை. அமைதியோ அமைதி காத்து வருகிறது.

    என்ன அர்த்தம்?

    என்ன அர்த்தம்?

    இந்தியைத் திணிக்காதீங்கன்னு சொல்லக் கூட ரஜினிக்கு தோணவில்லையா அல்லது அதை எப்படி என் வாயாலே சொல்வேன் என்று தயங்குகிறாரா என்று தெரியவில்லை. இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்? இந்தி வேணும்னு கேட்கிறாரா? அல்லது மத்திய அரசு ஏன் கட்டாய திணிப்பில் இருந்து பின் வாங்கிவிட்டது என்ற கோபத்தில் இருக்கிறாரா தெரியவில்லை.

    அரசியல்

    அரசியல்

    இது நாடு தழுவிய மொழி சமாச்சாரம். இதில கூட வாய் திறக்கவில்லைன்னா எப்படி? முதல் நபரா கருத்து சொல்லவில்லை என்றாலும், மற்றவர்களை பார்த்தாவது கருத்தை உதிர்த்திருக்கலாமே.. குறைந்தபட்சம் ஒரு ட்வீட் போட்டிருந்தால்கூட போதுமே! இதுக்கு கருத்து சொல்லகூட அரசியலுக்கு வந்துதான் சொல்லணுமா? முக்கியமான நேரத்தில், இப்படி பேசாமல் இருப்பதுகூட ஒருவகையில் அதிகார வர்க்கத்துக்கு துணை போவது போலதான்!

    English summary
    We do not know what Actor Rajnikanths opinion in the matter of Hindi impose issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X