சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை மாலைக்குள் ரஜினியிடம் இருந்து முக்கிய அறிக்கை?

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து நாளை மாலைக்குள் (டிசம்பர் 1) ரஜினியிடம் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Newest First Oldest First
10:16 PM, 30 Nov

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேர ஆலோசனை. மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை 6.30 மணிக்கு முடிந்ததாக தகவல். அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. நாளை மாலைக்குள் ரஜினியிடம் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்பு
1:49 PM, 30 Nov

தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும் - நிர்வாகிகளிடையே ரஜினிகாந்த்.
1:48 PM, 30 Nov

பெயருக்கு கட்சி தொடங்கி 10%-15% வாக்குகளை வாங்கி தோல்வி அடையவிரும்பவில்லை- நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த்.
12:56 PM, 30 Nov

மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக ரஜினிகாந்த் பேசினார்- மக்கள் மன்ற மா.செ. அசோக் தகவல்
12:41 PM, 30 Nov

என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்
12:41 PM, 30 Nov

என்ன முடிவு எடுத்தாலும் கூட இருப்போம் என நிர்வாகிகள் கூறினர்
12:40 PM, 30 Nov

சென்னையில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசிவருகிறார்
12:19 PM, 30 Nov

அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினி அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் அறிவிப்பார்- மன்ற நிர்வாகி
12:18 PM, 30 Nov

மாவட்ட செயலாளர்களின் கருத்தை உன்னிப்பாக கேட்டார் ரஜினி- மக்கள் மன்ற நிர்வாகி பேட்டி
12:14 PM, 30 Nov

மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முடிந்த உடன் போயஸ் கார்டன் திரும்பினார் ரஜினிகாந்த்
12:10 PM, 30 Nov

ஆலோசனை கூட்ட முடிவுகள் தொடர்பாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிடக் கூடும் என எதிர்பார்ப்பு
12:07 PM, 30 Nov

ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் பால்கனியில் இருந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்து வணக்கம் தெரிவித்தார் ரஜினிகாந்த்
12:06 PM, 30 Nov

ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது
11:53 AM, 30 Nov

இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்- ரஜினி
11:53 AM, 30 Nov

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்- அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது
11:52 AM, 30 Nov

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு எடுக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்- ரஜினி
11:52 AM, 30 Nov

மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை- ரஜினி
11:51 AM, 30 Nov

பலமுறை எச்சரித்தும் சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை- ரஜினி
11:49 AM, 30 Nov

என்னோடு இருந்தால் சம்பாதிக்க முடியாது, அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்: ரஜினி
11:48 AM, 30 Nov

அரசியலில் பதவிக்கு வந்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க வேண்டாம்- ரஜினி
11:46 AM, 30 Nov

மன்ற நிர்வாகிகளால் என் பெயருக்கு கெட்ட பெயர் வருவதாகவும் ரஜினி வருத்தப்பட்டதாகவும் தகவல்.
11:45 AM, 30 Nov

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நானே முடிவு எடுப்பேன்- மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி பேசியதாக தகவல். மாவட்ட செயலாளர்கள் சிலரது செயல்பாடுகள் சரியாக இல்லை என ரஜினி வருத்தப்பட்டதாகவும் தகவல்.
10:38 AM, 30 Nov

ஜனவரியில் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுங்க தலைவா..ரஜினிக்கு மன்ற நிர்வாகிகள் நெருக்கடி
10:03 AM, 30 Nov

ராகவேந்திரா மண்டபம் முன்பாக ரஜினிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
9:55 AM, 30 Nov

மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை நடைபெறும் ராகவேந்திரா மண்டபத்தை வந்தடைந்தார் ரஜினிகாந்த்
9:49 AM, 30 Nov

ரசிகர்களின் வாகனங்கள் புடைசூழ ரஜினிகாந்த் கோடம்பாக்கம் சென்று கொண்டிருக்கிறார்
9:49 AM, 30 Nov

வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் என போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் முழக்கம்
9:46 AM, 30 Nov

மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார்
9:45 AM, 30 Nov

வீட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்திற்கு புறப்பட்டார். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் ரஜினிகாந்த். ஆலோசனை கூட்டத்துக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் வாகனத்துக்கு ரசிகர்கள் மலர் தூவினர்.
9:44 AM, 30 Nov

சென்னை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார் ரஜினிகாந்த்
READ MORE

Actor Rajinikanth likely to make announcement on Political Entry today- Live Updates
English summary
Actor Rajinikanth likely to make announcement on Political Entry today. Here is the Live Updates on Rajinikanth's Makkal Mandram Leaders meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X