சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. நீதிமன்றத்திலும் வெற்றி பெற முடியாது.. அன்றே சொன்ன ரஜினி- வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என்றும் அன்றே ரஜினிகாந்த் சொன்னது தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

    Sterlite ஆலையை மீண்டும் திறக்க கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

    தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தின்போது ஊர்வலம் சென்ற அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் காயமடைந்தவர்களை சந்திக்கவும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் தூத்துக்குடி சென்றிருந்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டெர்லைட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. ஸ்டெர்லைட் நிறுவனம்

    ஸ்டெர்லைட்

    ஸ்டெர்லைட்

    அவர் கூறுகையில் இப்ப அரசாங்கம் சொல்லிட்டாங்க, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பூட்டு போட்டாகிவிட்டது. அது திறக்கப்படாது என்று. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் கோர்ட்டிற்கு சென்றார்களேயானால் அவர் மனிதர்களே கிடையாது.

    நீதிமன்றத்தில்

    நீதிமன்றத்தில்

    நீதிமன்றத்தில் இருப்பவர்கள் மனிதர்கள்தான். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் அங்கு ஜெயிக்காது. ஸ்டெர்லைட் கோர்ட்டுக்கு போய் ஜெயிக்க விடக் கூடாது, அவர்கள் போகவும் மாட்டாங்க. மக்கள் சக்தி முன் எந்த சக்தியும் ஒன்றுமே செய்யாது.

    ஆலை திறக்க வேண்டும்

    ஆலை திறக்க வேண்டும்

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் உண்மையான மனிதர்களாக இருந்தால் இத்தனை பேர் அடிப்பட்டு உயிரிழந்து கிடக்கும் நிலையில் அந்த ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்புக் கூட வரக் கூடாது என ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியிருந்தார்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது, தமிழக அரசு செய்தது சரியே என கூறி ஆலை திறப்பு தொடர்பாக வேதாந்தா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    சாதகம்

    சாதகம்

    எனவே கோர்ட்டுக்கு போயும் வேதாந்தாவுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது. நீதிமன்றத்திற்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது என அன்றே சொன்ன ரஜினிகாந்த் என அவர் பேசிய வீடியோக்களை ரசிகர்கள் அதிகமாக பரப்பி வருகிறார்கள்.

    English summary
    Actor Rajinikanth says that Sterlite industries reopening will never happen again, Video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X