சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனவரியில் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுங்க தலைவா..ரஜினிக்கு மன்ற நிர்வாகிகள் நெருக்கடி

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் இருக்கிறது என்று கூறியவர் ரஜினிகாந்த். மேலும் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது; இதை சரி செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார் ரஜினிகாந்த்.

அத்துடன் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமது கட்சி போட்டியிடும் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைப் போல நல்லாட்சியை மக்களுக்கு கொடுப்பேன் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு? நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு?

ரஜினியை வைத்து விவாதங்கள்

ரஜினியை வைத்து விவாதங்கள்

மேலும் தமிழகத்தில் சில பிரச்சனைகளில் ரஜினிகாந்த் தீவிரமாக குரல் கொடுக்கவும் செய்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார்; ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியால் எந்த கூட்டணிக்கு ஆபத்து; ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் எந்த கட்சியில் இருந்து அதிகம் பேர் விலகுவார்கள்? என்றெல்லாம் பெரும் விவாதங்கள் தமிழகத்தில் களைகட்டின.

கட்சி எப்போது?

கட்சி எப்போது?

ஆனால் அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்து ஆண்டுகள்தான் ஓடின. ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான எந்த ஒரு சமிக்ஞையுமே வெளிவரவில்லை. இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சியையே தொடங்கமாட்டார் என்கிற யூகங்களும் முன்வைக்கப்பட்டன. மேலும் பாஜகவின் நெருக்கடிக்குள்ளாகிதான் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்தார்; உண்மையில் அவருக்கு அப்படி எல்லாம்விருப்பம் இல்லை எனவும் கூறப்பட்டது.

ரஜினி உடல்நிலை

ரஜினி உடல்நிலை

இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் 2 மாதங்களில் கட்சி தொடங்குவார்; 3 மாதங்களில் கட்சியை அறிவிப்பார் என அவரது தீவிரமான ஆதரவாளர்கள் இடைவிடாமல் நம்பிக்கை கொடுத்தும் வந்தனர். இடையில் கொரோனா பரவல், லாக்டவுன் என நீடித்ததால் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு என்பது பெரும் சந்தேகத்துக்குரியதாகவே மாறியது. இதற்கேற்ப ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவாய்ப்பில்லை என்பதை நியாயப்படுத்தும் வகையில் அவரது உடல்நிலையை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டது.

ரஜினி விளக்கம்

ரஜினி விளக்கம்

இந்த செய்தி குறித்து ரஜினிகாந்த் பின்னர் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அதில், தமக்கு உடல்நலன் பிரச்சனைகள் இருப்பதாகவும் அரசியல் குறித்து ஆலோசனை செய்து முடிவை அறிவிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவது சந்தேகம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சென்னையில் ஆலோசனை

சென்னையில் ஆலோசனை

இந்த நிலையில்தான் சென்னையில் இன்று திடீரென மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை ரஜினிகாந்த் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் கட்சியை தொடங்கியே ஆக வேண்டும்; வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டாக வேண்டும் என மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
Actor Rajinikanth will meet his members of Rajini Makkal Mandram today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X