சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. நீட் பற்றி ஏன் பேசவில்லை.. சுற்றிவளைத்த கேள்விகள்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் மக்கள் பிரச்சினை எதற்கும் குரல் கொடுக்காத ரஜினிகாந்த் இதற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் பாஜகவினரால், நாடு முழுக்க உற்சாகத்தோடு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்கள் மட்டுமல்லாது, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

நீட் தேர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை மாணவர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்நீட் தேர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை மாணவர்கள் மன்னிக்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மரியாதைக்குரிய நரேந்திர மோடி ஜி, இந்த சவாலான காலகட்டத்தில் உங்களுக்குள் உள்ள வலிமையான மனிதருக்கு கூடுதல் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். மகிழ்ச்சியான பிறந்தநாள் ஆகுக என்று தெரிவித்துள்ளார்.

சில டிவீட்

சில டிவீட்

ஆகஸ்ட் 28ஆம் தேதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் ட்வீட் வெளியிட்டு இருந்தார். இதன் பிறகு செப்டம்பர் 3 ஆம் தேதி திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நீட் விவகாரத்தில் அமைதி

நீட் விவகாரத்தில் அமைதி

இதன்பிறகு, இரண்டு வாரங்களாக அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம், இந்தி திணிப்பு விவகாரம் உள்ளிட்ட எதிலும் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது மோடி பிறந்த நாளை ஒட்டி அவர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இதை நெட்டிசன்கள் கேள்வி கேட்பதை பார்க்க முடிகிறது. நீட் தேர்வுக்கு வாய் திறக்கவில்லை, ஹிந்தி மொழி திணிப்புக்கு வாய் திறக்கவில்லை, பெரியாருக்கு வாழ்த்து இல்லை, ஆனால் தங்களது தலைவர் மோடிக்கு மட்டும் டிவிட். அரசியலுக்கு சுத்தமும் தகுதி இல்லாத மனிதர் என்கிறார் இந்த நெட்டிசன். இதேபோல பல நெட்டிசன்களும் ரஜினிகாந்த்தின் ட்வீட் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

English summary
Actor Rajinikanth wishes prime minister Narendra Modi a happy birthday, but netizens criticize Rajnikanth's silence over Tamilnadu related issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X