சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பழனி" போட்ட மொட்டை.. ரஜினி ரசிகர்களை கட்டம் கட்டி.. செமத்தியாக பணம் சுருட்டிய தீவிர ரசிகர்!

ரஜினியின் தீவிர ரசிகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "உன்னால என்னை என்ன பண்ண முடியும் சீமான்? என் தலைவனை விமர்சனம் பண்ணி உனக்கு பப்ளிசிட்டிதான் கிடைக்கும், நீ ஒரு ஜோக்கராதான் இருக்க முடியும்" என்று ரஜினிக்கு ஆதரவாக பேசி பேசியே 50 லட்சத்தை சுருட்டி உள்ளார் ரஜினி பழனி என்பவர்!

நிஜ பெயர் பழனி.. ரஜினி மீதுள்ள பற்றினால் ரஜினி பழனி என்று இவரே பெயர் வைத்து கொண்டார். ரஜினிக்கு நேர் எதிரி சீமான் என்பதால், பழனி சீமானை பற்றி தரக்குறைவாகவும், மிரட்டலாகவும் பேசி வீடியோ வெளியிட்டார். இந்த ஒரு வீடியோவுக்கு பிறகுதான் இவர் ஃபேமஸ் ஆக ஆரம்பித்தார்.

இதை பார்த்ததும், பல ரஜினி ரசிகர்கள் பழனியை ரஜினியின் தீவிர ஆதரவாளர், விசுவாசி, அபிமானி, என்றெல்லாம் நம்ப ஆரம்பித்துவிட்டனர். இதுதான் சாக்கு என்று நினைத்த பழனி, அவர்களிடம் பணம் கறக்கும் வேலையை காட்டினார்.

டிசம்பர் 12ம் இல்லை.. ஜனவரி 14ம் இல்லை.. ரஜினி கட்சி எப்பப் பொறக்கப் போகுது தெரியுமா.. செம மேட்டர்! டிசம்பர் 12ம் இல்லை.. ஜனவரி 14ம் இல்லை.. ரஜினி கட்சி எப்பப் பொறக்கப் போகுது தெரியுமா.. செம மேட்டர்!

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு

ஏற்கனவே ரஜினி மீது பைத்தியமாகவும், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று வெறித்தனமாகவும் இருப்பவர்களை கட்டம் கட்டினார். பணத்தை கறக்க ஆரம்பித்தார்ர். நதி நீரை இணைக்க தலைவர் ரஜினி சொன்னதக சொல்லி நடைபயணம் ஒரு பெண் உட்பட 7 பேரை சேலத்தில் இருந்து சென்னை வரை நடைபயணமாகவே அழைத்து வந்து ஏமாற்றியுள்ளார்.

மோசடி

மோசடி

இந்த நடைபயணத்திலும், அந்த ரசிகையிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டியதுடன், கடைசிவரை ரஜினியை பார்க்க ஒரு ஏற்பாடும் செய்யாமல் ஏமாற்றிவிட்டார். நதிநீர் இணைப்பு பெயரை சொல்லி ஏமாற்றியது போல, ரஜினி பாதுகாப்பு படை ஒன்றை அமைக்க போவதாக அடுத்த கதையை அளந்துவிட்டார். இதற்காக ஒரு வாட்ஸ்அப் க்ரூப் ஆரம்பிக்க போவதாக சொல்லி, அதில் ஒரு பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிவிட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்

இப்படியே, ரஜினியே நேரில் பார்க்க வைக்கிறேன், ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறேன், என்று சொல்லி சொல்லியே லட்சக்கணக்கில் ஏமாற்றி உள்ளார் பழனி. இது தொடர்பாக சென்னைபோலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்ட ரஜினி ரசிகைகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் கமிஷனர் அலுவலகமோ, டிஜிபி ஆபீசில் புகாரை தரும்படி அறிவுறுத்தி உள்ளது.

புகார்

புகார்

ரஜினியை நேரில் காட்டுவதாக சொல்லியே 50 லட்சம் ரூபாய் வரை ஒருவர் மோசடி செய்திருப்பதை கண்டு ரஜினி மக்கள் மன்றத்தினர் கொதித்து போய் உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இந்த ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இல்லையென்றால், ஆரம்பத்திலேயே பழனி கைது செய்யப்பட்டிருப்பார் என்கிறார்கள்.

English summary
Actor Rajnikanths fans complaint on Rajni Pazhani in Chennai Police Commissioner Office and booked in fraud case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X