• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ரஜினி.. என்ன விஷயம் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியையும், ஜனாதிபதியையும், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. இதுகுறித்த தகவலையும் ரஜினியே தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அடிப்படையிலேயே பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.. எத்தனையோ பிரச்சனைகள் தமிழகத்தில் நடந்துள்ள நிலையில், அவைகளில் பெரும்பாலானவற்றிற்கு குரல் கொடுக்காத ரஜினி, பாஜக மேலிட விவகாரம் என்றால் உடனடியாக ரியாக்ட் செய்வார்.

குறிப்பாக, பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும், பிரதமருக்கு முதல் வாழ்த்தே ரஜினிகாந்த்தான் பதிவிட்டார்.. இதைதவிர ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் மோடிக்கு வாழ்த்து சொல்வது ரஜினிகாந்த்தின் வழக்கம்.

தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சி.. ஆனால் கே பாலசந்தர் இல்லாதது வருத்தம்.. ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சி.. ஆனால் கே பாலசந்தர் இல்லாதது வருத்தம்.. ரஜினிகாந்த்

மரியாதை

மரியாதை

அதேபோல, ரஜினியின் மீதும் மரியாதை வைத்திருப்பவர் பிரதமர் மோடி. ஒவ்வொருமுறையும் பாஜக தங்கள் பக்கம் ரஜினியை இழுக்கும் முயற்சி நடந்த போதும் சரி, அதை ரஜினிகாந்த் எதிர்கொண்டபோதும் சரி, பாஜக தலைவர்கள் யாரையுமே அவர் பகைத்து கொள்ளவில்லை.. பிரதமரும், அமித்ஷாவும், தேர்தல் சமயத்தில் சென்னைக்கு 2 முறை வந்து சென்றபோது, வெளியூருக்கு சென்று நாசூக்காக அவர்களை சந்திப்பதை தவிர்த்தார் ரஜினிகாந்த்.

பாஜக

பாஜக

அதேபோல, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பு வெளியிட்டபிறகும், பாஜகமீதும் சரி, மற்ற கட்சிகளிடமும் சரி, யாரையுமே விமர்சிக்கவில்லை.. அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. எந்தவித சர்ச்சை கருத்துக்களையும் கூறாமல் ஒதுங்கி வருகிறார். இதனிடையேதான், ரஜினிக்கு 3 மாதங்களுக்கு முன்பு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது.. திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அப்படிப்பட்டவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

தலைமுறைகள்

தலைமுறைகள்

விருது அறிவித்தபோதே, அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில், ரஜினிக்கு பிரதமர் மோடியும் வாழ்த்து கூறியிருந்தார்.. அதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில்,"பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர்... வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி.. அவருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.

  அப்பாவுக்கு இந்த ஐடியா ரொம்ப புடிச்சுருச்சு | Soundarya Rajinikanth | Hoote App | Filmibeat Tamil
   அச்சுறுத்தல்

  அச்சுறுத்தல்

  அதேபோல, தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அளித்ததற்காக மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினியும் ட்வீட் செய்திருந்தார்.. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமலேயே இருந்தது... நேற்று முன்தினம் டெல்லியில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது... இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

  சந்திப்பு

  சந்திப்பு

  இதையடுத்து பிரதமர் மோடியை ரஜினிகாந்த் விருதுபெற்ற அன்றைய தினமே நேரில் சந்தித்து பேசியுள்ளார்.. இதுதொடர்பாக ஒரு ட்வீட்டை ரஜினிகாந்த் இன்று பதிவிட்டுள்ளார்.. அதில், "மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.. அத்துடன் சந்திப்பின் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.. ரஜினியும், லதா ரஜினியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார்.

  வைரல்

  வைரல்

  அதேபோல, பிரதமர் சந்திப்பு குறித்த 2 போட்டோக்களை ரஜினி பதிவிட்டுள்ளார்.. அதில் ஒரு போட்டோவில் 3 பேருமே ஒரு ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டிருப்பது போல உள்ளது.. 3 பேருமே தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து உட்கார்ந்துள்ளனர்.. இரு தரப்பிலும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டது போலவும், பொதுவான விஷயங்கள் குறித்து விவாதித்தது போலவும் தெரிகிறது.. இந்த போட்டோக்கள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

  English summary
  Actor Rajnikanth met PM Modi and got his wishes as he received Dada shaeb phalke award
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X