சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிகிட்ட நான் வேற சொல்லணுமா?.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி

சூர்யா பேச்சு பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Actor Surya: அரசாங்கம் மேல் கோபத்தை தெரிவித்த நடிகர் சூர்யா

    சென்னை: "மோடிக்கிட்ட நான் என்னத்த தனியா சொல்றது.. சூர்யா பேசினதே மோடிக்கு கேட்டிருக்கு" என்று கிட்டத்தட்ட 10, 15 நாள் கழிச்சு ஒருவழியாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

    கடந்த 2 வாரங்களாக சூர்யா பேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆளும் தரப்பு, பாஜக தரப்பு சூர்யாவின் பேச்சினை பகிரங்கமாக எதிர்த்தது. சூர்யாவுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லை என்றுகூட சொன்னது.

    ஆனால் சீமான், டைரக்டர் ரஞ்சித் போன்றவர்களே சூர்யாவின் கருத்தை தைரியமாக வரவேற்றார்கள். இதற்கு பிறகுதான் "சொல்லலாமா, வேண்டாமா" என்று யோசிச்சு, சூழல் அறிந்து மற்றவர்கள் வரவேற்க ஆரம்பித்தார்கள். அப்படி வரவேற்றவர்களில் ரஜினியும் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு

    ரஜினி ரியாக்‌ஷன்

    ரஜினி ரியாக்‌ஷன்

    பொதுவாக, மத்திய அரசு எந்த அறிவிப்பு, திட்டம் கொண்டு வந்தாலும், அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷன் என்னவென்று தெரிந்து கொள்ள நம் மக்களுக்கு ஒரு ஆர்வம்! வழக்கம்போல் இந்த விஷயத்திலும் ரஜினி வாய் திறக்கவே இல்லை, துணிந்து கருத்து சொல்லவே இல்லை. அறிக்கையும் விடவில்லை, அவ்வளவு எதற்கு மோடியின் தேர்தல் வெற்றி முதல், பணமதிப்பு இழப்பு விவகாரம் வரை ஓடிப்போய் முதல் ஆளாக ட்வீட் போட்டு வாழ்த்திய ரஜினி, இந்த விவகாரத்திற்கு ட்வீட் கூட போடவில்லை.

    காப்பான்

    காப்பான்

    இந்நிலையில், நேற்றுதான், இதை பற்றி வாய் திறந்துள்ளார். அதுகூட சூர்யா பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால்தான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது ரஜினிகாந்த்தான்.

    மோகன்லால்

    மோகன்லால்

    அப்போது பேசிய அவர், ‘வைரமுத்துவின் தமிழாற்றுபடை புத்தகத்தை படித்தபோது அவர் மீதிருந்த மரியாதை மேலும் அதிகமானது என்பதுமுதல் கேவி ஆனந்த், மணிரத்னம், மோகன்லால் வரை புகழ்ந்து தள்ளிவிட்டார். பிறகுதான் சூர்யா விஷயத்துக்கு வந்தார். அப்போது அவர் பேசும்போது:

    நடிப்பு

    நடிப்பு

    நடிகர் சூர்யா விடாமுயற்சியால் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். முதல் படமான ‘நேருக்கு நேர்' படத்தில் சூர்யா நடிப்பு பேசப்படும்படியாக இல்லாமல் போனது. ஆனால், அதன்பிறகு பாலாவின் ‘நந்தா', ‘பிதாமகன்' படங்களில் சிறந்த நடிகராக தன்னை செதுக்கிக்கொண்டு முன்னேறி வந்துள்ளார்.

    நல்ல பிள்ளைகள்

    நல்ல பிள்ளைகள்

    சூர்யாவையும், கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக அண்ணன் சிவகுமார் வளர்த்திருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகள். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாள்களுக்கு முன்னர் தெரியவந்தது. புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து இங்கே சர்ச்சை ஆனது. இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்றுகூட இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். இந்த விஷயத்தில் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

    அறக்கட்டளை

    அறக்கட்டளை

    மாணவர்களுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். மாணவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து நிறைய அனுபவத்தை தெரிந்து வைத்துள்ளார். அதனால் சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும்" என்றார்.

    வாழ்த்து

    வாழ்த்து

    "சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டிருக்கிறது" என்கிறார் ரஜினி.. அப்படியானால் இந்த கருத்தை மோடியிடம் தனியாக எடுத்து சொல்ல ரஜினி தயாரில்லை என்றே தெரிகிறது. அதே நேரத்தில் சூர்யாவையும் வாழ்த்தியது போலவும் ஆகிவிட்டது.

    English summary
    In Chennai, Actor Rajnikanth says that Prime Minister Modi has asked Suryas speech about New Education Policy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X