சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி சிலை திறப்பு விழா.. குவிகிறார்கள் தலைவர்கள்.. ரஜினிகாந்த்தும் வருகிறார்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு- வீடியோ

    சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மறைந்த கருணாநிதிக்கு அறிவாலயத்தில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்கான சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.

    பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த விழாவில் சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

     சுமூக உறவு

    சுமூக உறவு

    இதை தவிர முக்கிய தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நடிகர் ரஜினிகாந்துக்கும் திமுக தலைமை சார்பில் நேரடியாகவே அழைப்பு போனது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ரஜினிகாந்துடன் சுமூக உறவு இல்லாமல் இருந்தது. முரசொலி தலையங்கத்தின் மூலம் இது அதிகமாகவே வெளிப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் மெல்ல அடங்கியது.

     தனிப்பட்ட பாசம்

    தனிப்பட்ட பாசம்

    இதனையடுத்து கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு போனது. கருணாநிதி மீது மிகுந்த மரியாதையையும் தனிப்பட்ட முறையில் பாசத்தையும் வைத்திருந்தவர் ரஜினிகாந்த். எனவே இந்த விழாவில் ரஜினி நிச்சயம் கலந்து கொள்வார் என்றே அப்போது கூறப்பட்டது.

     அருமை நண்பர் ரஜினிகாந்த்

    அருமை நண்பர் ரஜினிகாந்த்

    அதோடு 2 நாட்களுக்கு முன்பு ரஜினியின் பிறந்த நாளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், "திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் போட்டிருந்தார்.

     கலந்து கொள்வார்

    கலந்து கொள்வார்

    ஸ்டாலின் - ரஜினி இடையே தற்போது சுமூக உறவு நிலவி வரும் நிலையில், நாளை நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என தகவல்கள் உறுதியாக கூறுகின்றன.

    English summary
    Actor Rajinikanth likely to participate in the opening ceremony of Karunanidhi statue in Anna Arivalayam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X