சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. ரொம்ப ரொம்ப லேட்டானாலும்.. லேட்டஸ்டாக ரெடியாகும் ரஜினி.. விரைவில் பிகேவுடன் அக்ரிமென்ட்

அரசியல் பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட ஆரம்பித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    லேட்டஸ்டாக ரெடியாகும் ரஜினி..விரைவில் பிகேவுடன் அக்ரிமென்ட் | Rajnikanth met Prashanth Kishore

    சென்னை: யார் எதையாவது பேசிட்டு போகட்டும் என்று, ரஜினி தன்னுடைய அரசியல் வேலையில் படு பிஸியாக இறங்கி விட்டார். அரசியல் புலி பிரஷாந்த் கிஷோரை சந்தித்து பேசியநிலையில், அவருக்கு அட்வான்ஸ் தந்து விட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

    பிரசாந்த் கிஷோர்.. தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுக்கும் அரசியல் புலி.. சிறந்த ஆலோசகர்.. திறமைசாலி.. ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார்.

    இவரை இந்த முறை எந்த கட்சி பயன்படுத்தி கொள்வது என்று ஒரு போட்டா போட்டியே நடந்து வருகிறது. தங்கள் கட்சியை வெற்றி பெற வைக்க இவரை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    திமுக

    திமுக

    ஏற்கனவே திமுகவுக்கு ஐபேக் நிறுவனம் பல ஐடியாக்களை தந்துள்ள நிலையில், வரும் தேர்தலிலும் கைகொடுத்து உதவும் என்றே தெரிகிறது. இதைதவிர கமலும் இவரை 5 முறை சந்தித்துபேசி வந்துவிட்டார். இதற்கான முன்பணம் கூட பிரசாந்த் கிஷோருக்கு தரப்பட்டதாக சொல்லப்பட்டது.

    பெருமைதான்

    பெருமைதான்

    அப்போது மய்ய உறுப்பினர்கள் இதை பற்றி சொல்லும்போது, "எங்களுடன் கைகோர்த்ததில் பிரசாந்த் கிஷோருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆளுங்கட்சியே பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யத்தயாராக இருந்த நிலையில் அவர் எங்கள் கட்சிக்கு பணியாற்ற ஒப்புக்கொண்டது எங்களுக்கு பெருமை தான்" என்றார்கள்.

    பொங்கல்

    பொங்கல்

    இந்நிலையில், ரஜினியும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசிவிட்டு வந்தார். இது சம்பந்தமான செய்திகள் வெளியானபோதே, ரஜினி வரும் பொங்கலுக்கு தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற தகவலும் எழுந்தது. இது பல வருடமாக சோர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு தெம்பையும், உற்சாகத்தையும் தந்தாலும், "தர்பார்" அரசியலாகவே ஒரு பக்கம் இந்த சந்திப்பு பார்க்கப்பட்டது.

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    இப்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது, பிரசாந்த் கிஷோருக்கு ரஜினி அட்வான்ஸ் தந்து ஒப்பந்தம் செய்யவுள்ளார் என்பதுதான்.. இதன்மூலம் ரஜினி தொடங்க போகும் கட்சிக்கு இவர்தான் ஆலோசகர் என்பதும், அதற்கான முன்பணத்தை ரஜினி தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சோர்ந்து உட்கார்ந்திருந்த ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்துள்ளது.

    அறிமுக கட்சி

    அறிமுக கட்சி

    பொதுவாக, பிரஷாந்த் கிஷோர், இதுவரை பணியாற்றியது எல்லாமே மக்களிடம் செல்வாக்கு கொண்ட பழைய கட்சிகள்தான். கிட்டத்தட்ட மக்கள் நன்கு அறிந்த ஃபேமஸ் கட்சிகள்தான்! இதில் புதிய கட்சிக்கு பணியாற்றுகிறார் என்றால் கமலை சொல்லலாம். ஆனால் கட்சியே தொடங்காமல் பணியாற்ற வருகிறார் என்றால் அது ரஜினிக்குதான்!

    அட்வைஸ்

    அட்வைஸ்

    இன்னொரு தகவலும் உலா வருகிறது. அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் ஒருவரும் ரஜினியுடன் கை கோர்க்கிறாராம். இவர் தமிழகத்தில் உள்ள ஜாதி அரசியல், எந்த ஜாதிக்கு என்ன மாதிரியான வாக்கு வங்கி உள்ளது, அதை எப்படிக் கையாள வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை ரஜினி கட்சிக்கு அட்வைஸ் தரப் போகிறார் என்று சொல்கிறார்கள்.

    வித்தியாசமானது

    வித்தியாசமானது

    கட்சி ஆரம்பித்து... தேர்தலில் தோற்றுபோய்.. வரும் தேர்தலிலாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் பிரஷாந்த் கிஷோரை அனைவரும் இதுவரை சந்தித்துள்ளனர். ஆனால் ரஜினியின் சந்திப்பு வித்தியாசமானது.. கட்சி பெயரே அறிவிக்கும் முன்பே, அவருடன் ஆலோசனையும், அதற்கான முன்பணமும் என விறுவிறு வேலைகளில் இறங்கி உள்ளார்.

    புதிதாக கட்சி தொடங்க போகும் ரஜினிக்கு மட்டுமல்ல.. இது பிரஷாந்த் கிஷோருக்கே சவாலாகத்தான் இருக்க போகிறது. பார்க்கலாம்.. என்ன மாதிரி பாயப் போகிறது இந்த முரட்டுக் காளை என்பதை.

    English summary
    Actor Rajnikanth had met Prashanth Kishore on the launch of the New Party. Now it is reported that Rajni is going to make a deal with Advance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X