சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய பிக்பாஸ் சக்தி.. துரத்தி சென்று பிடித்த மக்கள்.. பரபரப்பு!

சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்ற பிக்பாஸ் சக்தி- வீடியோ

    சென்னை: சென்னை சூளைமேட்டில் நடிகர் சக்தி, போதையில் கார் ஓட்டி மக்கள் மீது மோத சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. பிக்பாஸ் மூலம் ''டிரிக்கர் சக்தி'' என்று இவர் பெயர் பெற்று பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் இவர் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள இளங்கோவடிகள் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    Actor Shakthi rammed his car so fast in Chennai, arrested for drunk and drive

    சூளைமேட்டில் இன்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து இருக்கிறது. மிகவும் நெரிசலான சாலையில் தாறுமாறாக சென்ற கார் மக்கள் மீது மோதும் வகையில் நெருங்கி சென்றுள்ளது. இதனால் மக்கள் சாலை ஓரம் ஒதுங்கி தப்பித்தனர்.

    வேகமாக மக்களை மோதும்படி சென்ற அந்த காரை மக்கள் துரத்தி சென்றனர். பைக்கில் இருந்த சிலர் அந்த காரை துரத்திக் கொண்டு சென்றனர். 20க்கும் அதிகமானோர் அந்த காரை துரத்திக் கொண்டே சென்றனர். கடைசியில் வேகமாக அந்த காரை நெருங்கி அதை நிறுத்தினர்.

    காரை திறந்து பார்த்த போதுதான் அது சக்தி என்பது தெரிந்து இருக்கிறது. இதையடுத்து மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த பகுதிக்கு வந்த அண்ணா நகர் போலீசார் அவர், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு செய்த சோதனையில் இவர் வேகமாக போதையில் வந்து கார் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது போதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Actor Shakthi rammed his car so fast in Chennai, finally gets arrested for drunk and drive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X