சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..!

எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கருத்து கூறியுள்ளார் நடிகர் சிங்கமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: "2 முறை திமுக தோற்று போய்விட்டது.. 10 வருஷமா ஆட்சியிலும் இல்லை.. அதனால், அந்த கட்சியை மக்கள் மறந்துவிட்டனர்.. திமுகவைவிட மறுபடியும் எடப்பாடியாரே வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு போராடி சரி செய்து விட்டார் நம் முதல்வர்" என்று நடிகரும், பேச்சாளருமான சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சிங்கமுத்து... இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்... அதன் பின்னர் வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன.

 Actor Singamuthu favours Edappadi Palansami as CM again

2 பேருமே ஒருவர் ஒருவரை அரசியல் ரீதியாக வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்... இன்று வரை இவர்கள் சேரவுமில்லை.. அந்த பிரச்சனையும் அப்படியே இருந்து கொண்டே இருக்கிறது.

இப்படியான நிலையில் சிங்கமுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.. அதில் திமுக, பாஜக உட்பட வடிவேலுவுடன் நடிப்பது வரை அனைத்து விஷயங்களையும் பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான்:

பாஜகவில் சேரும்படி என்னை கூப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள்.. அவங்க பெரிய கட்சியா இருக்காங்க.. தேசிய அளவிலான கட்சி என்பதால், சிறந்த பேச்சாளர்கள் அவர்களுக்கு தேவைப்படுது... எங்களை போன்றவர்களை தேடிபிடித்து பேச வைத்தால், பாஜகவை தமிழகத்தில் வளர்க்க முடியுமோ என்ற நோக்கம் புதிதாக வந்துள்ள தலைவர் முருகன் அவர்களுக்கு இருக்கலாம்.

அவர் கட்சியை வளர்ப்பதற்காக சில முயற்சிகள் எடுப்பதை "இழுக்குகிறார்கள்" என்றெல்லாம் சொல்ல முடியாது.. இஷ்டப்பட்டவர்கள் அங்கு போவார்கள்.. எங்களை போனற் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இங்கேயே இருப்பார்கள்.. தமிழகத்தில் பாஜக எடுபடுமா? எடுபடாதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது..

தேர்தல் நெருங்குகிறது.. 2 முறை திமுக தோற்று போய்விட்டது.. 10 வருஷமா ஆட்சியிலும் இல்லை.. அதனால், அந்த கட்சியை மக்கள் மறந்துவிட்டனர்.. நாங்கள் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காக, திமுகவை புதுப்பிப்பதற்காக, தன் கட்சியை ஞாபகப்படுத்துவதற்காக ஸ்டாலின் சில நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறார்.. பல ரகசிய திட்டங்களை போட்டு, பேச்சாளர்களை உருவாக்கி, ரகசியமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள் காலம் மேலும் நீட்டிப்பு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள் காலம் மேலும் நீட்டிப்பு

ஆனால், 2021-ம் ஆண்டு தேர்தலிலும் எடப்பாடி தான் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.. அவர், மக்களை மகிழ்ச்சிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. இப்போதைக்கு திமுகவைவிட மறுபடியும் எடப்பாடியாரே வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு போராடி சரி செய்து விட்டார்.

தியேட்டர்கள் இப்போது இல்லை.. அதனால் ஷூட்டிங் நடக்கவில்லை.. பல தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.. மக்கள் உயிர் ஒவ்வொன்றும் முக்கியம் என்று முதல்வர் சொல்லி உள்ளார்.. அதனால், பாதிப்பு அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே தியேட்டர்களுக்கு செயல்பட அனுமதி இல்லை.. கொரோனா தொற்று குறைந்தவுடன் அனைத்தும் சகஜ நிலைக்கு வந்துவிடும்" என்றார்.

English summary
Actor Singamuthu favours Edappadi Palansami as CM again
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X