சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Actor surya education policy | கல்வி கொள்கை கருத்து குறித்து நடிகர் சூர்யா பதிலடி!- வீடியோ

    சென்னை: கல்விக்கொள்கை குறித்து சக மனிதனாக, ஒரு குடி மகனாகவே கேள்விகளை முன்வைக்கிறேன் என நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

    புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவின் எச் ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Actor Suraya again talking about national education policy

    ஆனால் நடிகர் கமல்ஹாசன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கல்விக்கொள்கை குறித்து தனது கருத்து தொடர்பாக நடிகர் சூர்யா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சகமனிதனாக
    சூர்யா வேண்டுகோள்

    அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு குடிமகனாக, சகமனிதனாகத்தான் கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினேன். தேசிய கல்விக்கொள்கை குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
    சூதாட்டமாக மாறிவிடக்கூடாது

    கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி
    என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறிவிடக்கூடாது.

    அச்சமூட்டுகிறது
    துடைத்து எறிந்துவிடும்

    புதிய கல்விக்கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர் கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

    பறப்பதற்கான சிறகு
    சிறகை முறிக்க வேண்டாம்

    ஏழை மாணவர்களுக்கு கல்விதான் உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்துபோகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம். இவ்வாறு நடிகர் சூர்யா தங்களின் அகரம் அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Suraya again talking about national education policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X