சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருத்தர் படிச்சா அந்த வீடே மாறும்.. ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும்.. கல்வி குறித்து சூர்யா

Google Oneindia Tamil News

சென்னை: ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும் என நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் உங்கள் சூர்யா பேசுறேன். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படிச்சா அந்த நாடே மாறும்.

இந்த பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டுவிட்டார்கள். நாம் நினைத்தால் அதை மாற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டாம்.. பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.. முன்னாள் நீதிபதிகள் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டாம்.. பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.. முன்னாள் நீதிபதிகள்

விண்ணப்பங்கள்

விண்ணப்பங்கள்

அந்த வீடியோவில் மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்துவது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பின்னர் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து கல்வி உதவிக் கோரி எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை அகரம் பவுண்டேஷன் நிர்வாகிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன.

3030 விண்ணப்பங்கள்

3030 விண்ணப்பங்கள்

இவ்வாறு அகரம் பவுண்டேஷனில் கல்வி உதவி கேட்டு நேற்று வரை 3030 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. தேவைப்படும் மாணவர்களுக்கு நாம் உதவி செய்திடுவோம். கொரோனாவால் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்கள் நிதியுதவிக்காக www.agaram.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என உள்ளது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

பொதுமக்கள், கோவிட் போராளிகளான மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ், பிரஸ் மற்றும் ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், பிஆர்ஓக்கள், தியேட்டர் பிரிதிநிதிகள், தியேட்டர்கள் ஊழியர்கள், மற்றும் அன்பான ரசிகர்களின் குடும்பத்தினருக்காக கொரோனா கல்வி நிதியாக ரூ 3.5 கோடி அகரம் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

நீட் தேர்வு குறித்து சூர்யா குரல் கொடுத்ததை அடுத்து #TNStandWithSuriya, #நீட்என்ற_மனுநீதிதேர்வு என்ற ஹேஷ்டேக்குகள் டிரென்டிங்கில் இருந்து வருகின்றன. ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

English summary
Actor Surya says that he is ready to help dropout children because of corona pandemic. Agaram has announced Rs. 3.5 crore for Covid 19 Education fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X