சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம்

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ரஜினி பேசிய பேச்சுக்கள் காப்பான் பட டீசரில் இடம்பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Actor Suriya Kaapaan Movie: சூர்யாவின் காப்பான் பட டீசரில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள்- வீடியோ

    சென்னை: ஒரு காலத்தில் ரஜினி படத்தை வெளியிடவே பயந்த, தயங்கிய காலம் இருந்தது. இப்போது ரஜினி பேசிய வார்த்தைகளையே திருப்பி அடித்து படம் எடுக்கும் துணிச்சல் சினிமா இயக்குனர்களுக்கு வந்துள்ளது!

    ஒட்டுமொத்த தமிழகத்தின் ஓட்டை உடைசல்களை அப்பட்டமாக வெளிச்சம் காட்ட வரப்போகிறது காப்பான் என்ற படம். சூர்யா, மோகன்லால், ஆர்யா என பெரிய பெரிய ஸ்டார்கள் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் டீசர் ரிலீசாகி உள்ளது. அனல் பறக்கிறது டீசர்.. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாகியுள்ளது. காரணம், அது பேசும் டாப்பிக்ஸ் அப்படி. "அவன் பேச்சு, நடத்தை, பார்வை.. இது எதுவுமே சரியில்லை" என்ற வசனத்துடன் ஆரம்பமாகிறது பட டீசர்.

    ஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்!ஒரே வழி.. மோடிக்கு எதிராக கட்சிக்குள் நகர்த்தப்படும் காய்கள்.. பாஜகவின் பிளான் பி இதுதான்!

    பணம் கொட்டலை?

    பணம் கொட்டலை?

    "தமிழ்நாட்டை பாலைவனமாக்கிட்டு, இந்தியாவை சூப்பர் பவர் ஆக்க போறீங்க?" என்று ஆர்யா கேட்கிறார். அதற்கு "துபாய்கூட பாலைவனம்தான்.. அங்கே பணம் கொட்டலை?" என்று ஒருவர் எதிர்கேள்வி எழுப்பவும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது இந்த டீசர். நம்மளைப் பார்த்து கேட்கும் கேள்வி போலவே ஒரு பீலிங்!

    உறுமும் மோகன்லால்

    உறுமும் மோகன்லால்

    "மக்களோட எதிர்ப்புணர்ச்சியை தூண்டிவிட்டுட்டு விளையாடிட்டு இருக்கிற ஒரு நாஸ்ட்டி பொலிட்டிக்கல் கேம்.. எங்கள சீண்டி இருக்கிறது அமைதியா படுத்துட்டு இருக்கிற புலியை.. பாயறதுக்கு ரொம்ப நேரமாகாது" என்று உறுமுகிறார் மோகன்லால்.

    நக்சல் மாதிரி பேச்சு

    "இயற்கையாகவே உற்பத்தி ஆகிற நதியை தனக்கு மட்டும்தான்னு சொந்தம் கொண்டாடற உரிமையை யாருங்க கொடுத்தா? போராடறதே தப்புன்னா.. போராடறதுக்கான சூழ்நிலையை உருவாக்குவதும் தப்புதானே?" என்று ஹீரோ சூர்யா கேள்வி எழுப்ப, "ஏன் நக்சல் மாதிரி பேசிட்டு இருக்கீங்க?" என்று பதில் வந்து விழுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உசுப்பியுள்ளது இந்த வசனம்தான்.

    சாட்சாத் ரஜினி

    சாட்சாத் ரஜினி

    காவிரி நீர் பிரச்சனை, வெளிநாட்டு முதலைகளின் இறக்குமதி, மத்திய அரசின் சந்தை பொருளாதாரத்தை இந்த படம் நார் நாராக கிழிக்க போகும் என்று தெரிகிறது. அவ்வளவு கூர்மையான வசனங்கள் உள்ளன. அதிலும் "எல்லாத்துக்கும் போராடறதா?, எதுக்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடாய்டும்னு அன்னைக்கு சொன்னவர் சாட்சாத் ரஜினியேதான்.

    சூர்யா வசனம்

    சூர்யா வசனம்

    ஏற்கனவே சூடு பிடித்து எரிந்த ஸ்டெர்லைட்டில் அண்டா அண்டாவாக நெய்யை ஊற்றி மேலும் கொதிப்பை ஏற்படுத்தியது ரஜினியின் பேட்டிதான். கிட்டத்தட்ட ஸ்டெர்லைட் விவகாரம் நடந்து ஒரு வருடம் ஆன நிலையிலும், இன்றும்கூட நம்மால் மறக்க முடியாத பேச்சுதான் அன்று ரஜினி பேசியது. அதைதான் சூர்யா இந்த படத்தில் வசனமாக பேசியுள்ளார்.

    கிழியும் முகத்திரை

    கிழியும் முகத்திரை

    அதற்கு ஒருவர் "ஏன் நக்சல் மாதிரி பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்கிறார். அப்படியானால் போராடுபவர்களையும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும் "நக்சல்கள்" என்று இந்த நாடு சித்தரிக்கிறது! ஆக மொத்தம்.. தமிழகத்தை சுரண்டி.. நாசம் செய்து.. வளங்களை கொள்ளையடித்து வந்த கும்பல்களின் முகத்தைக் கிழிக்கும் படமாக இது இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    காப்பான் - இருப்பான்

    காப்பான் - இருப்பான்

    அதே சமயம், சம்பிரதாயத்துக்குகூட, மரியாதைக்குகூட யாரையும் எதற்காகவும் நம் மக்கள் விட்டு வைப்பதில்லை என்பதும், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சலை பெற்றுவிட்டார்கள் என்றும் தெரியவருகிறது. அதற்கான துவக்கமாக இந்த "காப்பான்" இருப்பானா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. நேரில்தான் மக்களால் கேள்வி கேட்க முடியலை.. சினிமாவிலாவது நல்லா தைரியமா கேளுங்க!

    English summary
    Actor Surya Film KAAPPAAN Teaser has released and criticized Actor Rajnikanths comments on Sterlite Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X